24 Jul உன்னால் முடியும் நண்பா!
Inferiority complex அல்லது தமிழில் தாழ்வு மனப்பான்மை.
முதன்முதலாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கண் மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணரான டாக்டர் Alfred Adhler என்பவர் 1900களின் ஆரம்பத்தில் இந்த உளவியல் தத்துவத்தை கண்டறிந்தார்.
தாழ்வு மனப்பான்மை, ஆளுமை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது இவரது கருத்து. இவர்கள் மற்றவர்களை விட, குறைவாக இருப்பதைப் போல உணர்கிறார்கள், மற்றவர்களைப் போல நல்லவர்கள் அல்ல, பயனற்றவர்கள், அல்லது அழகு குறைவானவர்கள் என தங்களை தாங்களே முடிவு செய்து கொள்கிறார்கள்.
எனவே பொது வெளியில் எல்லாம் தெரிந்தது போல் பேசுவது, அல்லது தன்னை அதிகமாக அலங்கரித்து கொள்வது என்று போலியாக வாழ்கிறார்கள்.
ஆக இதன் விளைவு…?
1 மன அமைதி போய்விடும்.
2. சுய திறமை, அறிவை வளர்க்க முடியாது.
3. உண்மை நண்பர்களை அறிய முடியாது.
4.எதிர்கால வேலைவாய்ப்பு, திருமண வாழ்வில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.
மாணவ நண்பனே.. இந்த மனநிலை ஏன்? இதை மீறி வெற்றி பெற முடியுமா என்று உனக்குள் கேள்வி எழுகிறதா? ஏன் என்ற கேள்வி முக்கியம் அல்ல. இதை வெல்ல முடியும் என்பதே மகிழ்ச்சியான செய்தி.
நண்பா! உன் கைகளை விரித்து பார்… இரண்டு உண்மைகள் தெரியும்.
1. ஐந்து விரல்களும் ஒன்று போல இல்லை.
2. உன் உள்ளங்கை ரேகைகள் உலகில் வேறு எவரிடமும் இல்லை. இதுவே ஆண்டவர் உனக்கு உணர்த்தும் செய்தி. உன்னை பிறருடன் ஒப்பீடு செய்வதில் இருந்து விடுபட வேண்டும்.
ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மையுடன், வேறு வேறு நோக்கத்துடன் உருவாக்கி இருக்கிறார் என்று நீ முழுமையாக நம்பவேண்டும். அடுத்து சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் (படிப்பு, உடற்பயிற்சி, சுய திறமை கண்டறிந்து, அதை வளர்க்க ,அதில் ஒளிர முயல்தல்).
நாம் போலி வாழ்க்கை வாழ அல்ல, மகிழ்ச்சியான, வெளிப்படையான, மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழவே இயேசு உன்னை அழைக்கிறார்.
செயல் ஒன்றே! அவர் சமூகத்தில் அமர்ந்து சுய பரிசோதனை செய்து, அதிகாலை தியான நேரத்தில் தீர்மானம் செய்.
போட்டி உலகம் இது.. கடினமாக உழைத்து போராடு, எறும்பு போல சுறுசுறுப்பாக, பொறுமையுடன் முயற்சி செய். சமயமும் தேவசெயலும் உனக்கு வாய்க்கும்.
(பிரசங்கி 9.11) கிறிஸ்துவுக்குள் வாழும் உனக்கு எப்போதும் வெற்றி உண்டு…!
SMYRNA PALRAJ
Posted at 11:04h, 29 AugustSuperrr👍
Wilsonlightshine
Posted at 09:02h, 30 AugustYes, Good news