மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரம் வித்தியாசப்படுத்துக.

ஆவி (தேவ நினைவு)

  • தேவனோடு தொடர்பு கொள்ளும் பகுதி
  • தேவனோடு ஐக்கியம் கொள்ளும் தன்மையிருக்கிறது
  • நித்தியமானது
  • பார்க்கவும் முடியாது
  • உணரவும் முடியாது
  • ஜீவனை அளிக்கும் பகுதி
  • ஜீவ சுவாசம்

 

ஆத்துமா (சுய நினைவு)

  • மற்ற மனிதர்களோடு ஐக்கியம் கொள்ளும் தன்மையிருக்கிறது
  • நித்தியமானது
  • பார்க்க முடியாது
  • உணர முடியும்
  • மனம், சித்தம். யோபு 15:1
  • மன எழுச்சி (உணர்வுகள்)
  • நினைவு

 

சரீரம் (உலக நினைவு)

  • உலகத்தோடு தொடர்புகொள்ளும் பகுதி
  • அநித்தியமானது (அழிவுள்ளது)
  • பார்க்க முடியும்
  • உணரவும் முடியும்
  • வெளிப்படையாக தெரியக்கூடியது
  • கண்ணாடியில் தெரியக்கூடிய சரீரப் பகுதி
  • முகமுகமாய் பேசும்போது பார்ப்பது
  • புறம்பான மனிதன் – சரீரம்

உள்ளான மனிதன் – (ஆவி, ஆத்துமா). 2கொரிந்தியர் 4:16. மரணம் – சரீரத்திலிருந்து உள்ளான மனிதன் பிரிக்கப்படுகிறது. உங்கள் தோளில் எனது கையை வைத்ததன் மூலம், உங்கள் சரீரத்தைத் தொடுகிறேன்.

எனது வார்த்தையால், உங்கள் ஆத்துமாவை, சந்தோஷமாகவோ, துக்கமாகவோ மாற்ற முடியும். என் வார்த்தையால், உங்களது சரீரத்தைத் தொடாமலே, உங்களைக் காயப்படுத்த முடியும் அல்லது சந்தோஷப்படுத்த முடியும்.

ஆவி, ஆத்துமா இரண்டையும் பிரித்தறிவது கடினம்.  தேவனுடைய வார்த்தை ஆவியையும், ஆத்துமாவையும், உருவக்குத்திப் பிரிக்கக்கூடியது. (எபிரெயர் 4:12)

 

ஆவியின் செயல்பாடு  (இருதயம், உள்ளம், மனசாட்சி, ஜீவன்)

  • ஆராதனை
  • தொழுதுகொள்ளுதல்
  • வழிபடுதல்
  • ஐக்கியம்  1கொரிந்தியர் 14:2,14,15
  • விண்ணப்பம்
  • வெளிப்பாடு 1கொரிந்தியர் 2:9-12
  • சந்தோஷம்  (ஆண்டவரைச் சார்ந்திருத்தல் மூலம் வருவது)
    அப்போஸ்தலர் 13:52, ரோமர் 5:1, ஆபகூக் 3:17,18

 

ஆத்துமாவின் செயல்பாடு

  • அறிவு,சிந்தனை, நீதிமொழிகள் 24:14, 2:10, 19:2 – விருப்பம் அல்லது சித்தம்
  • விருப்பு, வெறுப்பு – 1 சாமுவேல் 18:1, சங்கீதம் 84:2 – உணர்ச்சி அல்லது மனவெழுச்சி
  • ஞாபக சக்தி, கற்கும் திறன் – பகுத்தறிவு அல்லது கருத்துகள்
  • மகிழ்ச்சி (சூழலைப் பொறுத்து ஏற்படுவது)

 

சரீரத்தின் செயல்பாடு (உடல் , மாம்சம்)

  • ஆவி ,ஆத்துமாவாகிய உள்ளான மனிதன் தங்குமிடம். 1தெசலோனிக்கேயர் 4:4, 2கொரிந்தியர்5:1,8
  • ஆவி, ஆத்துமாவாகிய உள்ளான மனுஷனின் சித்தத்தை, செயல்படுத்தும் கருவி
    ரோமர் 6:19
  • புலனின்பம் – உடல் சார்ந்த இன்பம்
  •  தேவனோடு தொடர்புகொள்ள – ஆவி, ஆத்துமா
  • உலகத்தோடு தொடர்புகொள்ள -சரீரம்

 

மனிதன் சரீரம் , ஆத்துமா, ஆவி ஆகியவை இணைந்த ஆள் தன்மை உடையவன். சரீரம்(உடல்)  சார்ந்த இன்பங்கள், தற்காலிகமானவைகள். கடவுளைச் சார்ந்த இன்பங்கள் யாவும், நித்தியமானவைகள் (எபிரெயர் 11:24-28)

No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.