24 Jul மனிதன் விலங்குகளிலிருந்து வேறுபட்டவனா?
மனிதன்
- தேவன் மனிதனை, பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கி, ஜீவ சுவாசத்தை, அவன் நாசியிலே ஊதினார் – ஜீவ ஆத்துமாவானான்
- ஜீவன் + ஆத்துமா = ஜீவாத்துமா
- மண்ணினாலே உருவாக்கினார். ஆதியாகமம் 2:19
- வார்த்தையினாலே உருவாக்கினார்
- மனிதனை தேவ சாயலாக, தேவ தன்மையின்படி, உண்டாக்கினார்.(வெளிப்படையான தோற்றமல்ல) ஆதியாகமம் 1:26,27
- மனுஷர் மாம்சம் வேறே. 1கொரிந்தியர் 15:39
- மனித ஆத்துமா, ஆவியில் வைக்கப்பட்டுள்ளது (பகுத்தறிவு உள்ளது)
- தேவனோடு தொடர்பு கொள்ளும் பகுதியான ஆவி உள்ளது. தேவனைத் தொழுதுகொள்வான்
- அழியாத ஆத்துமா
- மனிதன், சரீரத்தில் மரிக்கும்போது, ஆத்துமா நித்தியமானது
- மனிதன் ஆவிக்குரியவனாயிருக்கிறான். ஆவியாக உள்ள தேவனோடு, உறவாட முடியும்.
யோவான் 4:24 - அழியா ஆவி – அழியா ஆத்துமா – அழியும் சரீரம்
- ஆவி மற்றும் ஆத்துமா – ஆளத்துவம் – உள்ளான மனிதன்
- மனித ஆத்துமா, ஆவியில் வைக்கப்பட்டுள்ளது.
- மனிதனின் ஆவி, மேல்நோக்கி எழும்புகிறது.
மிருகங்கள் அல்லது விலங்குகள்
- மிருகங்களின் மாம்சம் வேறே
- மிருக ஆத்துமா, அதின் சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளது (பகுத்தறிவு இல்லை)
- தேவனோடு தொடர்பு கொள்ள, ஆவி இல்லை
- அழியும் ஆத்துமா
- சரீரம் மரிக்கும்போது, ஆத்துமாவும் மரிக்கும்
- மிருகங்கள் ஆவிக்குரியவை அல்ல (ஆவி இல்லை)
- அழியும் ஆத்துமா – அழியும் சரீரம் – ஆவி இல்லை
- மிருக ஆத்துமா, சரீரத்தில் வைக்கப்பட்டுள்ளது
- பிரசங்கி 3:21 – ஆவி இல்லை, ஆத்துமா மட்டுமே இருக்கிறது
No Comments