26 Jul இயேசு மனிதனா? கடவுளா?
- இயேசுகிறிஸ்து மனிதனாக, அவதரித்தபோது ஆவி, ஆத்துமா, சரீரம் உடையவராக இருந்தார்.
- இயேசு உலகத்தில் பிரவேசித்தார். எபிரெயர் 10:5, சங்கீதம் 40:6-8
- மனித ஜீவனும், இயல்பும், ஒருங்கே இணைந்த சரீரத்தைத் தம்முடைய குமாரனுக்கு ஆயத்தப்படுத்தினார்.
- நித்திய வார்த்தை மாம்சமானார்.
- மனிதராக, மனிதர்களுக்காக, மரணமடையக் கூடியவராக மாறினார். எபிரெயர் 10:5, சங்கீதம் 40:6
ஆவி
- ஆவியில் மனிதர்கள் சிந்திக்கிறதை அறிந்தார். மாற்கு 2:8
- ஆவியில் பெருமூச்சு விட்டார். மாற்கு 8:12
- ஆவியில் களிகூர்ந்தார். லூக்கா 10:21
- ஆவியை ஒப்புவித்தார். லூக்கா 23:46
- ஆவியில் கலங்கினார். யோவான் 13:21
ஆத்துமா
- ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் – மாற்கு 16:34
- ஆத்துமா, மரணத்திற்கேதுவான துக்கம் கொண்டிருக்கிறது – மாற்கு 14:34
- ஆத்துமா கலங்குகிறது – யோவான் 12:27
சரீரம்
- மாம்சத்தில் பாடுபட்டார்
- கொலையுண்டார். 1 பேதுரு 4:1,3:18
- பரிசுத்த ஆவியால் உற்பவித்தார் – மத்தேயு 1:20
- இயேசு கீழ்ப்படிந்திருந்தார் – லூக்கா 2:51
- இளைப்படைந்தார் – யோவான் 4:6
- ஒரு சரீரத்தை ஆயத்தம் பண்ணினீர்
- இயேசு – உலகத்தில் பிரவேசித்தார் எபிரெயர் 10:5
- பரலோகத்திலிருந்து இறங்கினவர் – யோவான் 3:13
- வார்த்தை மாம்சமானார். – யோவான் 1:14
- உலகத்தில் இருந்தார் – யோவான் 1:10
- இருக்கிறவர் – யோவான் 3:13
பரலோகத்தில்
- உலகம், அவர் மூலமாய் உண்டாயிற்று – யோவான் 1:10
- தேவன் இப்பூமியில் வந்து, மனிதர்களின் நடுவில் மனிதராக வாழ்ந்தார்.
- இயேசு அவருடைய சரீரமாகிய கூடாரத்தில், 33 ஆண்டுகள் மனிதர்களுடன் வாழ்ந்தார்.
- இயேசு இவ்வுலகில் இருந்தபோது, தம்முடைய மகிமையைத் தமது மாம்ச சரீரத்தில் மறைத்துக் கொண்டார்.
இயேசுவின் மகிமை இரண்டு விதங்களில் வெளிப்பட்டது
1.அறநெறி மகிமை – நிறைவான வாழ்க்கை, குணநலன்கள்
2.வெளிப்படையான மகிமை – மறுரூப மலையில் மகிமை வெளிப்பட்டது. மத்தேயு 17:1,2
(ஆயிரம் வருட அரசாட்சியில், வெளிப்படையான மகிமையோடு, விளங்குவார் என்பதை பேதுரு, யாக்கோபு, யோவான் கண்டனர்)
மூவொரு தேவனில்
- ஒரு நபராக இயேசு
- தேவனோடு இருப்பவர்
- சர்வவியாபி, எங்கும் இருப்பவர் – சங்கீதம் 139:7-12,
- மத்தேயு 18:20 – தேவன் என்ற நிலையில் ஒரேநேரத்தில் எங்கும் இருந்தார் என்பதை காட்டவே பரலோகத்தில் இருக்கிறவர் -யோவான் 3:13ல் கூறியுள்ளது.
- முன்கால நித்தியகாலத்தில், 100 சதவிகிதம் தேவன், முழுமையான தேவன், பரிபூரண தேவன்
பூமியில்
- மாம்ச சரீரத்தில், முழுமையான தேவன் (பாவமற்ற, பரிபூரண வாழ்வு வாழ)
- யோவான் (தேவகுமாரன் சுவிசேஷம்), முழுமையான மனிதன் (பசி, தாகம், களைப்பு, அழுதார், மரித்தார்)
- லூக்கா சுவிசேஷம் – மனுஷ குமாரன்
தற்போது பரலோகில்
- மகிமையின் சரீரம் பெற்ற மனிதனாக, பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
மாற்கு 14:62, அப்போஸ்தலர் 7:55,56, கொலோசெயர் 3:1 - 100 சதவிகிதம் தேவன்
- முழுமையான தேவன்
- மூவொரு தேவனில் ஒரு நபராக,
தெய்வீக பரிமாணத்தில்
- இயேசுகிறிஸ்து தேவகுமாரன், 100 சதவிகிதம் தேவன், முழுமையான தேவன்.
மனுஷீக பரிமாணத்தில்
- இயேசு இப்பூமியில் இருந்தபோது, 100 சதவிகிதம் மனிதன், முழுமையான மனிதன்
- இயேசுவின் மாம்சம் அழிவை காண்பதில்லை. அப்போஸ்தலர் 2:31,32, சங்கீதம் 16:10
- அவர் சரீரம் – பாவமில்லாத சரீரம் – 1 யோவான் 3:5 , அப்போஸ்தலர் 13:35-39. எனவே அது அழியவில்லை.
No Comments