
19 Dec கிறிஸ்து பிறப்பின் புதிர்
ஒரு சமயம் சாத்தான் தன்னுடைய உதவியாளனுடன் நடந்து கொண்டிருந்த போது, ஒரு மனிதன் மின்னுகிற பொருள் ஒன்றைக் கையில் எடுத்ததைக் கண்டார்கள். உதவியாளன் சாத்தானிடம் “அம் மனிதன் எதைக் கையில் எடுத்திருக்கிறான்?” என்று கேட்டான். அதற்கு சாத்தான் “உண்மை ஒன்றைக் கையில் எடுத்திருக்கிறான்” என்றான். அதற்கு உதவியாளன். “அவன் உண்மையைக் கண்டெடுத்ததைக் குறித்து உமக்குக் கவலையில்லையா?” என்று கேட்டான். “இல்லையே இதன் மூலமாக அம்மனிதனை. ஒரு மதத்தைத் தொடங்கச் செய்வேன்” என்று பதிலுரைத்தான்.
உண்மையைக் கண்டதாகக் கூறும் அநேகர் உண்மையுடன் பொய்மையும் கலந்து புதிய சமயங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் சாத்தானும் மகிழ்ச்சியடைகிறான்! ஆனால் கிறிஸ்துவின் பிறப்பு மிகவும் புதிர் நிறைந்ததாக அநேகரை நிலை குலையப் பண்ணினாலும். அது மாற்றப்படாத உண்மை. அதனை வைத்து எவரும் மதத்தைத் தொடங்க இயலாது!
இலத்தீன் மொழியில் O Magnum Mysterium, et admirable sacra- mentum என்னும் ஒரு பழைய கிறிஸ்துமஸ் பாடல் உள்ளது. இதனைத் தமிழில் ‘மாபெரும் புதிரே! அபூர்வமான திருவருட்பொருளே’ என்று மொழிபெயர்க்கலாம். கிறிஸ்துவின் மனுப்பிறப்பு ஒரு புதிரே!
20ஆம் நூற்றாண்டின் சீர்திருத்த இறையியலாளரான கார்ல் பார்த். “மனுப்பிறப்பு என்பது நம்மால் புரிந்து கொள்ளவியலாத ஒன்று. ஆனால், அது அபத்தமானதல்ல என்றும். அதனை அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக விளக்கவே கூடாது” என்றும் கூறுகிறார்.
மேசியாவை (கிறிஸ்துவை) எதிர்பார்த்துக் காத்திருக்கிற யூதசமயத் தலைவர்களே அவர் மனித உருவில் வந்தபோதோ. அவரை ஏற்றுக்கொள்ளவில்லை! ஏன்?
- யூதர்கள் மேசியாவை ஆதிக்க மனப்பான்மைகொண்ட அரசியல் தலைவராக எதிர்பார்க்க. அவரோ தாழ்மை நிறைந்த பணியாள் தலைவராக வந்தார்.
- எதிரிகளை அடக்கியாளுகிறவராக எதிர்பார்க்க, அவரோ இரட்சகராக வந்தார்.
- பாவிகள். புற இனத்தவர் மற்றும் வறியவர்களிடமிருந்து விலகியிருப்பார் என்று எதிர்பார்க்க, அவரோ அவர்களின் நண்பனாக வந்தார்.
- பாவிகளைக் கண்டனம் செய்வார் என்று எதிர்பார்க்க, அவரோ அவர்கள் மீது கருணையுடையவராய் வந்தார்.
- மேசியாவின் பூமிக்குரிய அரசை அவர்கள் கனவு காண. அவரோ பரலோக அரசைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
- யூத சமயத்தையும், கட்டிக்காத்த தங்களையும் அவர் புகழ்வார் என்று எதிர்பார்த்திருக்க. அவரோ யூத சமயத்திலிருந்த குறைகளைச் சுட்டிக்காட்டினார்.
மேசியாவைக் குறித்த முன்னறிவிப்புகளை அறிந்திருந்தும் யூத சமயத் தலைவர்கள் நூதனமான எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தது எப்படி? மல்கியா தீர்க்கருக்கும். திருமுழுக்காளர் யோவானுக்கும் இடைப்பட்ட 400 ஆண்டுகளில் திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்க்கர்கள் இல்லாததால், யூதர்கள் தங்களுடைய சமயம் தொடர்பான போதனைகளில் தெளிவில்லாதிருந்தனர். அதே நேரத்தில், பிற சமயங்களின் தாக்கத்துக்குள்ளாகி தங்கள் அடையாளத்தை இழந்துபோயிருந்தனர். இந்நிலையில் தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்கவும். தங்களது அரசுரிமைக்காகவும் வைராக்கிய யூதர்கள் போராடினர். யூத சமயத்துக்குள் ஏற்பட்ட உட்பூசல் களால், பரிசேயர் சதுசேயர் மற்றும் எஸ்சீனியர் (Essenes) போன்ற குழுக்கள் தோன்றின. திருமறை முன்னறிவித்த மேசியாவை மறந்தனர். தங்களின் வாய்வழிப் போதனைகளை இறைவாக்குக்கு நிகராக்க முயற்சித்தனர். தங்களுடைய உரிமைகளை மீட்டெடுப்பதற்காக அரசியல் ரீதியான மேசியாவை எதிர்பார்க்க ஆரம்பித்தனர். ஆகிலும் திருமறையின் அடிப்படையிலான ஆவிக்குரிய மேசியாவை சிலர் மட்டும் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பும் இலக்கியம் சார்ந்த புதிர். இறைவாக்கினரின் புதிர் மற்றும் இறையாளுகையின் புதிராய் இருக்க அதிலிருந்து அவர்கள் கண்டறிந்த உண்மைகளை ஆராய்வோம்.
இலக்கியம் சார்ந்த புதிர் (Poetical Mystery):
இயேசு கிறிஸ்து பிறப்பதற்குச் சற்று முன்னர் அவருடைய தாயாரான மரியாள் பாடிய பாடல் நமக்குப் பல உண்மைகளைக் கற்றுக்கொடுக்கிறது.
மரியாளின் புகழ்ப்பாடல் (Mary’s Mugaificat) (லூக்கா 146-55) மரியாள் கருவுற்றிருந்த காலத்தில், கருவுற்றிருந்த தன் உறவினரான எலிசபெத்தைச் சந்தித்த போது. அவரை வாழ்த்திவிட்டுத் தான் சுமக்கும் குழந்தையைக் குறித்தும் பெருமையோடு பாடுகிறார். கன்னிப் பருவத்தில் கருவற்றிருந்த புதிரைக் கண்ணியக் குறைச்சலாக எண்ணி தவறான முடிவேதும் எடுக்காமல், அது கர்த்தர் தந்த ஈவு என்பதை கர்த்தருடைய தூதன் மூலம் அறிந்து களிப்புற்றார். வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தன் வயிற்றில் பிறக்கப் போகிறார் என்பதால் மகிழ்வுற்ற அவர் ஆண்டவருடைய வல்லமை, தூய்மை மற்றும் கருணை ஆகிய வற்றுக்காக அவரை மகிமைப்படுத்துகிறார். தன் குழந்தை ஆண்டவருடைய நீதி மற்றும் நியாயத் தீர்ப்பின் அடிப்படையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தும் தாழ்மையுள்ளவர்கனை உயர்த்தியும் உலகத்தையே உரு மாற்றுவார் என்னும் தெய்விக உண்மையைப் பற்றிய அறிவை அந்த வளர் இளம் பருவத்திலேயே பெற்றிருந்தார். சீரான கல்வி பெற்றிருக்க வாய்ப்பில்லாதிருந்தும் அவர் பெற்றிருந்த உலக அறிவும் இறைவாக்கு அறிவும் (54-55) வியப்பைத் தருகிறது
இறைவாக்கினரின் புதிர் (Prophetic Mystery):
கிறிஸ்து பிறப்பின் புதிரை சகரியாவின் பாடல் (லூக்கா 1:67-79) மூலமாகக் கண்டு வியக்கிறோம். சகரியாவின் வழிபாட்டுப் பாடல் (Benedictus of Zecharias) என்றழைக்கப்படும் இப்பாடலில், ஆசாரியராகிய சகரியா தன்னுடைய குழந்தை யோவானுக்குப் பெயர் சூட்டியவுடன், தூய ஆவியானவரால் நிரப்பப்பட்டு மேசியாவைக் குறித்து முன்னறிவித்தார் (67), மேசியாவுக்கு வழியை ஆயத்தப்படுத்தும் மகத்தான பணியைச் செய்வதற்காகத் தன் வயோதிப காலத்தில் ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவரைத் துதித்தார். யூதர்களால் மறக்கப்பட்டதும் மறைக்கப்பட்டதுமான மேசியாவைக் குறித்த உண்மைகனைத் தமது பாடல் வாயிலாக வெளிப்படுத்தினார். தம் சொந்த மக்களைத் தமது உருக்கமான இரக்கத்தினால் மீட்டெடுக்கப் போகிற உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயத்தைக் குறித்த உண்மையை உரக்கக் கூறினார். கிறிஸ்து பிறப்பின் புதிரை உலகிற்கு உணர்த்த ஓர் ஆசாரியர் இறைவாக்குரைஞராகிறார்!
இறையாளுகையின் புதிர் (Political Mystery):
யூதத் தலை வர்களின் வாய்வழிப் போதனையால் யூதர்கள் மட்டுமல்லாது. உலகத் தலைவர்களுமேகுழம்பிப் போயிருந்தனர். கிழக்கிலிருந்துவந்தஞானிகள் மேசியாவை அரச குடும்ப வாரிசாக நினைத்து ஏரோது அரசரின் அரண்ம னைக்குச் சென்றது (மத்தேயு 21-17) ஒரு சுவாரசியமான நிகழ்வு: தேடி வந்த அவர்களுக்கு பிரதான ஆசாரியர் மற்றும் வேதபார்கரை அழைத்து ஏரோது வழிகாட்டச் சொன்னதுடன், நானும் மேசியாவைக் காண விரும்பு வதாகக் கூறினார். திருமறையை நன்கறிந்த பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், மேசியாவின் வருகையின் நிறைவேறலை அறியாதி ருந்தனர்! ஏனென்றால், கிறிஸ்து அரசியல் தலைவராகத் தோன்றாமல் (6)ஆவிக்குரிய தலைவராக வந்திருந்தது அவர்களுக்கு ஒரு புதிர்! அதே நேரத்தில் வந்திருந்த ஞானிகளை தேவதூதர்கள் திசை திருப்பி அனுப்பியது ஏரோதை ஏமாறச் செய்த மற்றொரு புதிர்!
இவ்வாறு. மேசியாவை அரசியல் ரீதியான மேசியாவாக மட்டுமே அறிந்த யூதத் தலைவர்களின் தவறான போதனையால் ஏமாந்த ஏரோது மனம் குழம்பி. மேசியாவின் பிறப்பைத் தன் அந்தஸ்து மற்றும் பதவிக்கு ஆபத்து என்று தவறாக நினைத்து பயந்து போயிருந்தார். மேலும் இரண்டு வயதுக்குட்பட்ட யூத ஆண் குழந்தைகளைக் கொல்ல ஆணையிட்டும். மேசியாவைக் கொல்ல அது தருணமல்ல என்பது அவரின் அறியாமை! பொறுப்பிலிருந்தவர்களின் பொறுப்பற்ற போதனை இயேசுவைக் குறித்த நவறான எண்ணத்தை பலருடைய மனதில் வேரூன்றச் செய்திருந்தது ஏராளமான ஆண் குழந்தைகளைக் கொன்றது! ஆண்டவருடைய முதல் வருகையிலேயே இத்தனை புதிர்களாளால், அவருடைய இறுதி வருகையைக் குறித்து எத்தனை புதிர்களோ!
என் உள்ளத்துக்குள் கிறிஸ்து வந்ததால் கிறிஸ்துவின் பிறப்பு எனக்குப் புதிரல்ல! மரியாளைப் போல களிப்போடு காத்தரைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைப்போம். சகரியாவைப் போல கிறிஸ்துவைக் குறித்து மறக்கப்பட்ட உண்மைகளை உலகிற்கு நினைப்பூட்டி கிறிஸ்துவைக் குறித்த தவறான போதனைகளால் உண்டான சிதைவுகளைச் சீராக்குவோம்!
நன்றி : தரிசனச்சுடர் 2021 டிசம்பர்
No Comments