28 Jul விசுவாசிகள் பப்ஜி ஆடலாமா?
இந்தக் கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்னால், ஆன்லைன் விளையாட்டுக்கும் நம்முடைய உளவியலுக்கும் உள்ள தொடர்பை சற்று அலசுவோம்.
மே 25, 2019 அன்று உலக சுகாதார மையம் கேமிங் டிஸ் ஆர்டர் ஒரு மன நோய் என்று அவர்களின் நோய் வகைகளில் சேர்த்துக் கொண்டார்கள். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அதிகமாக வீடியோ கேம் விளையாடுவது ஒரு போதை மற்றும் மன நோய்.
வாலிபர்களுக்கு பப்ஜி என்றால் பெரியவர்களுக்கு கேன்டி கிரஷ். அதனால் வீடியோ கேம்ஸ் விளையாடுவதே தவறா என்றால் இல்லை என்பது தான் பதில் . ஆனால் அதை பொழுது போக்காக விளையாடுவதற்கும் போதை ஆக்குவதற்குமான இடைவெளி மிக குறுகியது.
இந்த விளையாட்டுகளுக்கு எப்படி அடிமை ஆகிறோம் என்றால், நாம் வெற்றி பெறுவதின் மூலம். ஆம்! நாம் வெற்றி பெறுவதின் மூலம் தான்.
நாம் வெற்றி பெறும்போதே நம்முடைய மூளையில் இருந்து டோபோமைன் மற்றும் டெஸ்ட்டோஸ்டீரோன் என்ற இரண்டு கெமிக்கல்ஸ் வெளிவருகிறது. அதுவும் நண்பர்களோடு சேர்ந்து டீம் ஆக, முகம் தெரியாதவர்களை ஜெயிக்கும்போது இன்னும் அதிகமாக வெளிவருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இதனால்தான் பப்ஜி விளையாடும்போது ஆரம்பத்தில் மிகவும் ஈஸியாக இருக்கும். ஏன் என்றால் கேம் டிசைன் அப்படி. ஆரம்பத்தில் நம்முடைய எதிரிகள் எல்லாம் பாட்ஸூம் விளையாட தெரியாதவர்களாக இருப்பார்கள். இதனால் எளிதாக வெற்றி பெறுவோம்.
அந்தக் கிளர்ச்சி, மறுபடியும் வேண்டும் வேண்டும் என்று தோன்றும். நாம் ஒவ்வொரு லெவல் தாண்டும்போதும் கேம் கடினமாகி நாம் தோற்கும்போதும், நமது மூளை அதை ஏற்றுக் கொள்ளாது. அந்தக் கிளர்ச்சியை நோக்கி மீண்டும் மீண்டும் ஓடும்.
இதனால், நம்முடைய நேரம் விரயம் ஆகுவது மட்டும் இல்லாமல், மூளை நம்முடைய கட்டுப்பாட்டை இழந்து, இந்த போதைக்கு அடிமை ஆகும். படிப்பில் கவனம் செலுத்த முடியாமை, இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது, பல மணி நேரம் உற்று ஒரே சிந்தையோடு விளையாடுவதால் ஏற்படும் பதற்றம், கண்கோளாறு என்று நம் உடலுக்கு ஏற்படும் கேடுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தோற்றால், அந்த வருத்தத்தைப் போக்கிக் கொள்ள தவறான பாதைகளைத் தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது மட்டும் இல்லாமல், நாம் பாவம் செய்யவும் கர்த்தரிடமிருந்து விலகி இருக்கவும் நேரிடுகிறது. இதில் என்ன பாவம் என்ற கேள்வி வருகிறதா? நாம் கர்த்தர் விரும்பாத செயல்களைச் செய்தல் மட்டும் பாவமல்ல, அவர் விரும்பும் செயல்களைச் செய்யாமல் இருப்பதும் பாவம்தான்.
- உதாரணமாக, ஜெபிக்காமல் இருப்பது,
- ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தாமல் இருப்பது,
- உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த படிப்பில் அல்லது வேலையில் முழு கவனம் செலுத்தாதது
- எல்லாமே பாவம் தான்.
நீங்கள் விளையாடுபவர் என்றால் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். எதற்காக இதை விளையாடுகிறோம் என்று. நம்மை திருப்திபடுத்திக் கொள்ளவா? அல்லது இந்த உலகத்தை விட்டு வேறு ஒரு கனவுலகில் ஹீரோவாக வாழ்வதற்காகவா? இல்லை நண்பர்களிடம் நான் இந்த விளையாட்டில் சிறந்தவன் என்று காட்டிக்கொள்வதற்காகவா?
இப்பொழுது நீங்கள் கேட்ட அந்த விசுவாசிகள் பப்ஜி ஆடலாமா? ஆடக்கூடாதா? என்ற கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
வேதாகமம் நமக்கு ( யாக்கோபு 1:14-15) தெளிவாக சொல்கிறது “அவனவன் தனது சுய ஆசைகளாலே இழுக்கப்பட்டு சிக்குண்டு சோதிக்கப்படுகிறான். இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது”.
எனவே நாம் ஞானமாய் செயல்பட்டு சுய இச்சைகளை விட்டு விலகி இருக்க வேண்டும். இதிலிருந்து வெளியே வருவது கடினம், இது ஒரு போதை, மனநோய் என்றெல்லாம் உலகம் வர்ணித்தாலும், நம்முடைய இயேசுவுக்கு இதிலிருந்து உங்களை மீட்பது லேசான காரியம்.
ஆவியானவர் நம்மோடு இருப்பதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் இந்த இச்சையை அவரிடம் ஒப்புக்கொடுத்து ஜெபிப்பது மட்டுமே. இதிலிருந்து விடுதலை தர அவர் வல்லவர்.
Sheeba
Posted at 10:54h, 20 AugustExcellent article…
Amaran s
Posted at 12:28h, 20 Augustபோட்டிவைத்து விளையாடும் விளையாட்டு விளையாட கூடாது அது நம்மை அடிமையாக்கிவிடும் மாறாக நம்மை அடிமையாகாமல் பார்த்துக்கொல்லவென்டும்
Kaipulla
Posted at 14:56h, 21 AugustIntha article la pubg edit panitu cricket word pota apovum athu thappa…
admin
Posted at 15:18h, 21 Augustஎலக்ட்ரானிக் கேம்களை என்டர்டெயின்மெண்ட் ஆக விளையாடறதுக்கும், அதுக்கு அடிமையாகறதுக்கும் நூலிழை வித்தியாசம்தான் இருக்கு. அத பத்தி தான் இந்த கட்டுரை தெளிவா விளக்குது. அது எந்த எலக்ட்ரானிக் கேம் ஆக இருந்தாலும் சரி!