
13 Aug அந்த அறைக்குள்
ரெண்டு பேரும் உள்ள போய் கதவை பூட்டுனாங்கனா உள்ள என்ன நடக்குதுன்னு யாருக்குமே தெரியாது. இந்த அநியாயம் ரொம்ப நாளா நடந்துட்டு இருக்குது. மேனேஜ்மென்ட்க்கு தெரிஞ்சும் அவங்க எந்த ஆக்ஷனும் எடுக்கல என்கிறதுதான் ஆச்சரியமா இருக்கு.
அந்த விடுதியின் ஓர் அறையைக் குறித்து சில மாதங்களாகவே மாணவர்களுக்குள் பரபரப்பான பேச்சு நிலவி வந்தது.
டேய் ராமு பாத்தியாடா?
என்ன பாத்தியாடா?
ஏல அந்த கோகுல் இருக்கான்ல. காலேஜ்ல ஃபுல்லா கெத்தா திரிவான் மச்சான். எப்பவுமே அடிதடின்னு சுத்துவான். இப்ப அவன் நடவடிக்கையே சரியில்ல கவனிச்சியா!
ஆமா சுரேஷ். நானும் பார்த்தேன்டா அதுக்கெல்லாம் அந்த சார் தான் காரணம்டா. அவனும் அந்த ரூமுக்கு போயிட்டு வந்தான். அதுக்கு அப்புறம்தான் இவன் ரொம்ப அமைதியாயிட்டான் மாப்ள. அந்த ரூம்ல ஏதோ நடக்குதுடா. என்னன்னு கண்டுபிடிச்சே ஆகணும்.
அந்த விடுதியறைக்குள் என்ன நடக்கிறது என்று எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ராமுவும் சுரேஷும் திட்டம் தீட்டினர். ஒருநாள் இரவு, விடுதி அறையின் பின்புறமாகச் சென்று ஜன்னல் வழியே என்ன நடக்கிறதென்று பார்க்க திட்டம் தீட்டினர்.
அவர்கள் நினைத்தது போலவே ஒரு நாள் நடந்தது. அந்த ஆசிரியரைப் பின்தொடர்ந்து ஒரு மாணவன் அந்த அறைக்குள் செல்வதை ராமுவும் சுரேஷும் நோட்டமிட்டனர். மெதுவாக யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரும் விடுதியறையின் பின்புறத்திற்குச் சென்றனர். அந்த ஆசிரியரும் மாணவரும் வழக்கம்போலவே கதவைப் பூட்டி தாழிட்டுக் கொண்டனர்.
ஏல ராமு. உள்ள என்ன நடக்குதுன்னு பாருல.
மச்சான் எனக்கு பயமா இருக்கு. நீ பாருடா என இருவரும் ஒருவரை ஒருவர் உள்ளே பார்க்கும்படி பேசிக்கொண்டனர்.
சரி தள்ளுடா நானே பாக்குறேன், என்று சுரேஷ் அந்த அறையின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.
ஐயோ. ராமு! உள்ளப் பாருடா.
அவன் இப்படி கத்தியதை கேட்டு பயந்த ராகுல் தொபுக்கென்று கீழே விழுந்தான்.
அடேய், ஏன்டா? ஐயோ. அம்மா என்று இடுப்பை பிடித்துக் கொண்டே எழுந்த ராமுவும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். நடந்த காரியம் இருவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அறையின் உள்ளே அந்த ஆசிரியர் நாற்காலியின் மேல் உட்கார்ந்திருக்க. அந்த மாணவன் முழங்காற்படியிட்டு விட்டத்தைப் பார்த்து அழுது கொண்டிருந்தான்.
இந்தக் காட்சியைக் கண்ட இருவரும் வேகமாக தங்கள் அறைக்குத் திரும்பி விட்டனர். மூச்சு வாங்க ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்க, ராமு சொன்னான், மாப்ள, இந்த விஷயத்தை சும்மா விடக்கூடாதுடா. ரெண்டுல ஒன்னு பாத்தே ஆகணும் என்றான். பிறகு இருவரும் தூங்கச் சென்றனர்.
இந்த நிகழ்வுக்குப் பின்பு இரு வாரங்கள் கடந்தன.
மச்சான் ராமு, நீ ஒரு விஷயத்தை கவனிச்சியாடா?
என்ன மாப்ள?
அன்னிக்கு அந்த சாரோட ரூமுக்கு போனான்ல, அந்த பையன். அவன் ரூம்ல இருந்து இப்போ எந்த ஸ்மெல்லுமே வரல பாத்தியா?
ஆமா சுரேஷ். நானும் உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சேன்.
அதப் பத்திதான் எல்லாருமே பேசிக்கிறாங்க மாப்ள.
அந்தப் பையன் போதைப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டவன். அவன் சிகரெட் மாதிரி ஏதோவொன்னப் பிடிப்பது எல்லாருக்குமே தெரியும். அவனோட ரூம்ல இருந்து புகையின் வாடை அருகிலுள்ள அறை களுக்குப் பரவுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
மச்சான் வாடா. அவன்கிட்டயே போய் கேக்கலாம். அந்த சாரோட ரூமுக்குப் போனதுல இருந்து எல்லாரும் ஒரு மார்க்கமாதான் சுத்துறாங் கடா.
இருவரும் அந்த மாணவனின் கதவைத் தட்டினர். அந்தப் பையன் அவர்கள் இருவரையும் புன்முறுவலோடு வரவேற்றான். இருவரும் அவனுடைய அறைக்குள் சென்றனர். உட்காருங்க நண்பர்களே!
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டே ராமுவும் சுரேஷும் அமர்ந்தனர்.
ப்ரோ. டைரக்டா விஷயத்துக்கு வர்றோம். உங்க நடவடிக்கைல ஒரு மாற்றம் இருக்கே. நீங்க அன்னிக்கு அந்த சாரோட ரூம்ல அழுதுட்டு இருந்ததை நாங்க ஒளிஞ்சிருந்து பாத்தோம். இத பத்தி தெரிஞ்சுக்கத்தான் வந்தோம்.
நீங்க சொல்றது சரிதான். அன்னிக்கு நான் அழுதுட்டு இருந்தது உண்மைதான் என்று சொல்லிக்கொண்டே விவரிக்கத் தொடங்கினான்.
நான் போதைப்பழக்கத்துக்கு அடிமைன்னு உங்கள்ல நெறைய பேருக்குத் தெரியும். என்னால அதப் பயன்படுத்தாம இருக்கவே முடியாது. அன்னிக்குனு பாத்து என் ரூம்ல யாருமே இல்ல. அதனால சந்தர்ப்பத்த பயன்படுத்தி நான் யாருக்கும் தெரியாம வச்சிருந்த போதை சிகரெட்ட எடுத்து என் ஆசைதீரப் புகைச்சிட்டு ஜன்னல் வழியா தூக்கிப் போட்டுட் டேன். எதிர்பாராத விதமாக அது கீழிருந்த சமையலறைக்குள் விழுந்து விட்டது. அதைக்கண்ட சமையல்காரர் நமது வார்டனிடம் சொல்லிவிட்டார்.
யார் இந்த சிகரெட் துண்டை போட்டதுனு நீங்களா ஒத்துக் கிட்டிங்கன்னா தனியா பேசிமுடிச்சிக்கலாம். இல்ல நானே கண்டு பிடிச்சேன்னா நடக்கிறதே வேற என்று வார்டன் கூறியதற்கு பயந்து நானே அவரைச் சென்று சந்தித்தேன்.
அவர் என்னை மிரட்டிவிட்டு, நீங்கள் கண்ட அந்த ஆசிரியருடன் அந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.
சார். இந்தப் பையனுக்கு கொஞ்சம் கவுன்சிலிங் கொடுங்க சார்.
நானும் பயத்தோடே அந்த ஆசிரியரை பின்தொடர்ந்து அந்த அறைக்குச் சென்றேன். ஆனால் நடந்தோ வேறொன்று. அன்றுமுதல் என்னுடைய வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
அந்த மாணவன் சொன்னதைக் கேட்ட ராமுவும் சுரேஷும் ஒருவரையொருவர் விழிபிதுங்கிப் பார்த்தனர்.
தொடர்ந்து பேசினான் அந்த மாணவன்.
பள்ளிப்பருவத்தில் எனது நண்பர்களின் தூண்டுதலால் பல தவறான பழக்கங்களுக்கு ஆளானேன். நாட்கள் நகர நகர அந்தப் பழக்கங்கள் என்னை அடிமைப்படுத்த ஆரம்பித்துவிட்டன. அதிலிருந்து விடுபட வேண்டுமென்று நான் பலமுறை முயன்றதுண்டு. ஆனால். துளியும் மாற்றமில்லை. தோல்விதான் மிஞ்சியது. இப்படிப்பட்ட சூழலில்தான் அந்த ஆசிரியரின் அறைக்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன். அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் காதில் இன்னும் தொனித்துக் கொண்டிருக்கின்றன. தீர்வே இல்லாத என் மோசமான வாழ்க்கைக்குத் தீர்வு தந்தவர் அவர்தான். அன்றே என் குற்றங்களை உணர்ந்தேன். கண்ணீர் விட்டு அழுதேன். என் பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒரு புதிய நபரை அவர் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்த
நபர்தான் என் வாழ்க்கையில் ஏற்பட்ட இத்தனை மாற்றங்களுக்கும் காரணம். இப்பொழுது என்னுடைய தீய பழக்கங்களை எல்லாம் விட்டு மன நிம்மதியோடு வாழ ஆரம்பித்திருக்கிறேன்.
ராமுவும் சுரேஷும் ஆச்சரியத்தோடு யார் அந்த நபரென்று கேட்டனர்.
சிரித்துக் கொண்டே அந்த மாணவன் அவர்கள் இருவரையும் அந்த ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்றான். கதவு பூட்டப்பட்டது.
அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளு வார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப் பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? ( 10:14).
No Comments