காதலில் விழுந்தேன்

“காதலுக்குக் கண்களில்லை”- இந்த வாக்கியம் க்ஷேக்ஸ்பியரால் பிரபலமாக்கப்பட்டது. ஆனால் அந்த வாக்கியத்தை எழுதியவர் அவரல்ல. ஜெப்ரி சாஸர் இந்த வாக்கியத்தை, ஷேக்ஸ்பியர் காலத்துக்கும்,  இரண்டு நூற்றாண்டுக்கும் முன்னமே எழுதியிருந்தார். இதைப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஒரு தத்துவ உண்மை போன்று நாம் இன்றும் பயன்படுத்தி வருகின்றோம்.

இலக்கியத்தைப் போலவே, அறிவியலையும் நன்கு அறிந்தவர்கள், காதல் என்பது டோபோமைன், செரோடினின், ஆக்சிடாஸின், எண்டோபின் என்னும் மூளை ரசாயனங்களின் கலவை என்று கூறுவர்.

இலண்டன் பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், இந்த ரசாயனங்கள் சிந்திக்கும் திறன் கொடுக்கும் மூளைப்பகுதிகளில், ஆற்றலைக் குறைக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். அதனால் அறிவியல் ஆய்வின்படி, அவர்களும் ஷேக்ஸ்பியர் மற்றும் சாஸர் சொன்ன “காதலுக்குக் கண்களில்லை” என்னும் வாக்கியத்தை ஒப்புக்கொள்கின்றனர்.

காதலுக்கு உண்மையாகவே, கண்களில்லையா? காதல் என்பது மூளை ரசாயனங்களின் கலவை மட்டும் தானா? இந்த வாக்கியங்கள் உண்மையென்றால் “நான் உன்னைக் காதலிக்கிறேன்” அல்லது “ஐ லவ் யூ” என்று சொல்வது, ஒரு பொருளை கண்மூடித்தனமாக மதிப்பீடு செய்யும் வாக்கியமாக அமையுமல்லவா?

அப்படியென்றால்,  ஒரு புருஷனை மற்றொருவருடைய மனைவியைப் புகழ்வதிலிருந்து எது தடுக்கிறது? ஒரு மனைவியின் மூளையை, அடுத்த ஆண்களுக்கு உபசரணை செய்வதிலிருந்து எது தடுக்கிறது?

கிறிஸ்டென் டன்ஸ்ட் என்னும் ஒரு பிரபலமான நடிகை, “நீ யாரிடம் காதல் கொள்வாய் என்பதை உன்னால் கட்டுப்படுத்த முடியாது,” என்று கூறியிருக்கிறார். அவர் தற்போது, தன்னுடைய நான்காவது காதலருடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் 15 வருடத்திற்குள். காதல் மீது உள்ள மோசமான கண்ணோட்டம், ஒரு உறவை உடைக்கப்பட்ட உறவாக மாற்றி விடும்.

அப்படியென்றால் காதல் என்றால் என்ன? பாலோ குயிலோ என்னும் பிரேசில் நாட்டைச்சேர்ந்த கதையாசிரியர் சொல்லுகிறார், “காதல் என்பது ஒரு கட்டுக்கடங்காத ஆற்றல்,” என்று. சார்லஸ் புக்காவுஸ்கி காதலை மூடுபனியுடன் ஒப்பிட்டு, கொஞ்ச நேரம் இருந்து பின்பு, எரிந்து மறைந்து போகும் என்கிறார்.

லூயிஸ் டி பெர்னியஸ் “காதல் என்பது தற்காலிகமான பயித்தியம்”, என்று கூறுகிறார். இந்த நவீன கலாச்சாரமும்,  நவீன இலக்கியமும், காதல் என்பது ஒரு மறைந்து போகும் கடலலையைப் போன்றது என்ற கண்ணோட்டத்தை நமக்குக் கொடுக்கிறது.

மைக்கேல் ஜாக்சன் தனது நுரையீரல் கிழியப் பாடுகிறார், “காதல் என்பது ஒரு பாடலில் உள்ள ஓர் உணர்வு போன்றது,” என்று. மேற்சொன்ன எல்லா கருத்துக்களும், காதலை ஒரு சாதாரண உணர்ச்சியாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை நமக்கு கொடுக்கிறது.

காதல் கரையை வந்து, மோதியடித்து, நம்மை இழுத்துச்செல்லும் கடலலையைப் போன்றது அல்ல. என்னதான் அலைகள் மோதியடித்தாலும்,  மூடமுடியாத ஆழமான குழியைப் போன்றது. காதல் சில நேரம் ஒரு வலுவான உணர்ச்சியாக வெளிப்படும். ஆனால், அந்த உணர்ச்சிகள் நம் மூளை நிலையின் வெளிப்பாடுகளே ஆகும்.

ஆம், காதல் என்பது நம் மூளையின் ஒரு நிலை. அது ஒரு சாதாரண உணர்ச்சி அல்ல. காதலை ஒரு உணர்ச்சியாக நாம் நினைக்கும்போது, மனிதனின் ஒரு உன்னதமான மூளை நிலையையும், அதன் செயல்பாடுகளையும் அவமாக்குகிறோம்.

காதல் என்பது கொஞ்சகாலம் இருந்து பின்பு, மறைந்து போகும் ஒரு கட்டுக்கடங்காத ஆற்றல் இல்லை. எந்த ஆற்றல் எதிர்த்து நின்றாலும், அசைக்கக்கூடாத அளவற்ற பெலன் போன்றதாகும்.

இந்த நூற்றாண்டின் ஆண்களும், பெண்களும், காதலுக்காக எதிர்பார்க்கக்கூடாத அளவிற்குப் பெரிய காரியங்களைச் செய்ய முற்படுகின்றனர். எவ்வளவு தான் பிரமிக்கத்தக்கக் காதலாக இருந்தாலும்,  நீங்கள் காதலிக்கும் நபர் உங்களைப் பார்த்தபிறகு, தான் உங்களை நேசிக்கத் தொடங்கியிருப்பார் அல்லவா?

ஆனால், உங்கள் பெற்றோர்கள் நீங்கள் பிறப்பதற்கு முன்னமே, உங்களை நேசிக்கத் தொடங்கி விட்டனர். உங்களுக்காக சேமித்து வைத்தனர். உங்களைக் குறித்து பல கனவுகளைக் கொண்டிருந்தனர். உங்களை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

நீங்கள் ஒரு கிலோ எடையை, உங்கள் கழுத்தில் கட்டிக்கொண்டு ஒரு மாதம் இருக்க வேண்டும் என்று உங்கள் காதலன் அல்லது காதலி சொன்னால் செய்வீர்களா? சந்தேகம் தான். ஆனால் நம் தாய்மார்கள், நம்மை பத்து மாதங்களாகச் சுமந்தனர்.

அவர்களுக்கு ஏற்பட்ட வலியையும், கஷ்டத்தையும், குறித்து ஒருதரம் கூட குறை சொல்லவில்லை. அவ்வளவு பெரிய வலிமையையும், தைரியத்தையும், அவர்களுக்கு கொடுத்தது, அவர்கள் நம்மேல் வைத்த அன்பே ஆகும்.

காதலில் விழுந்த ஆண்களிடமும், பெண்களிடமும், நான் சொல்ல விரும்புவது, நீங்கள் ஒருவரோடொருவர் கொண்டுள்ள காதல், உங்கள் பெற்றோரின் அன்பிற்கு முன்னால் நிலையற்றது. அது போன்று, நம் பெற்றோரின் அன்பு, நம்முடைய இரட்சகரின் அன்பிற்கு முன்னால் நிலையற்றது என்பதில் சந்தேகமே இல்லை.

வேதாகமம் கூறுகிறது “கடவுள் என்றால் அன்பு”. ஆனால், அதன் எதிர்மறை உண்மையாக இருக்க முடியாது. அதாவது “அன்பு கடவுளல்ல”. வேதாகமும் அப்படிக் கூறவில்லை. இந்த வாக்கியத்தை, இப்படி ஒப்பிட்டால், உங்களுக்குப் புரியும் என நினைக்கிறேன்.

போஸ்கொ என்பது ஒரு நாய்; ஆனால் எல்லா நாய்களும் போஸ்கொ அல்ல. அன்பு கடவுளல்ல என்றால், காதல் தூய்மையானது என்று எல்லாராலும் சொல்லப்படும் கூற்று பொய். ஏனென்றால் கடவுள் மட்டுமே தூய்மையானவர்.

நிஷா நியோகாங்கர் என்ற எழுத்தாளர் ஓரின சேர்க்கையைப் பற்றி, ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு “அன்பு தூய்மையானது; அதை அசிங்கப்படுத்தாதீர்கள்” என்று தலைப்பு வைத்துள்ளார்.

எதிர்பாராதவிதமாக எல்லா அன்புமே, தூய்மையானது அல்ல. நிஷாவின் கூற்றை ஆராய்ந்தால், ஒரு விபசாரம் செய்பவர், குழந்தைகளை, பாலியல் வன்கொடுமை செய்பவர் இப்படிப்போன்றோரின் காதல் தூய்மையானது என்று சொல்லலாமே.

பால் நம் வளர்ச்சிக்கும், உடல் பலத்திற்கும் நல்லது என்பதால், நாம் பூனை அல்லது நாய்களின் பாலைக் குடிப்பதில்லை. அதுபோன்று நம் பெற்றோரின் அன்பு தன்னலமற்றதாகவும், தூய்மையாகவும் இருப்பதனால், அன்பு என்றாலே, தூய்மையாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏன்? காதல் என்பதே, மனித இனத்தின் வீழ்ச்சியின் விளைவு தான்.

காதலைப் பற்றி குறைவான மனப்பான்மை கொள்ளாதீர். அது நமது உறவுகளை நிறைவற்றதாக்கி விடும். காதலைப் பற்றி உயர்ந்த மனப்பான்மையும் கொள்ளாதீர். அது நமது உறவுகளை நேர்மையற்றதாக மாற்றி விடும்.

கடவுளின் அன்பு மட்டுமே, உயர்ந்த மனப்பான்மையுடன் பார்க்கத் தகுதி பெற்றது. மிகவும் சிறந்ததான காதல் கதை கூட, தேவ அன்புக்கு முன்னால் மேன்மையற்றதாகத் தான் காணப்படும். இயேசுவின் அன்பை இன்னும் நீங்கள் ருசிக்கவில்லையென்றால், உங்கள் பாவ வழிகளை விட்டு, திரும்பி அவரிடம் விரைந்தோடுங்கள்.

பாவியான நமக்காக, அவர் மரித்ததுமன்றி, நம்முடைய அன்பு, தூய்மையற்றது மற்றும் ஒழுங்கற்றது எனத் தெரிந்தும் அவர் அன்பை, நமக்காக பொழிந்தருளியுள்ளார். படைப்புகள் படைக்கப்படுவதற்கு முன்னமே, அவர் நம்மை நேசித்திருக்கிறார். அவரிடம் விரைந்தோடுங்கள். நீங்கள், உங்கள் ஆத்துமாவிற்குத் தேவையான அந்த உன்னத அன்பைக் கண்டடைவீர்கள்.

 

6 Comments
  • ILAKIYA.M
    Posted at 15:57h, 15 August Reply

    Its nice

  • VNR ICEU
    Posted at 12:37h, 20 August Reply

    What a wonderful article

  • Staffana ISWARYA
    Posted at 19:36h, 29 August Reply

    Nice explaination

  • Wilsonlightshine
    Posted at 01:32h, 14 October Reply

    Nice its Good news

  • Loganathan
    Posted at 11:58h, 14 February Reply

    What a wonderful artical

  • Santhosh
    Posted at 17:41h, 14 February Reply

    Thank God, Good explanation and I like this quote “love is not god” but “god is love”🙏🏼

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.