07 Oct ஆண்டவரின் இதயத் துடிப்பு நம் நாடித்துடிப்பு!!!
அருட்பணியே ஆண்டவரின் இதயத்துடிப்பு. தாம் ஆண்டவரின் அடியவர் என்று சொல்லுகிறவர்களுக்கு அவரின் இதயத்துடிப்பு அவர்களின் நாடித்துடிப்பாக மாறுவதே அருட்பணிக்கு ஆயத்தம். கிறிஸ்தவ அருட்பணியானது ஆண்டவரின் ஒட்டுமொத்த நோக்கத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. நற்செய்தி மாணவர் மன்றத்தின் முன்னோடிகள் இதைத் தெளிவாகப் புரிந்ததினால் அருட்பணியை நான்கு நோக்கங்களில் ஒன்றாக வைத்துள்ளனர். இன்னும் சொல்லப்போனால் நம் ஊழியத்தின் நீறைபயன் அல்லது உச்சநிலை என்றே இதைக் கூறலாம். இந்த நோக்கத்தை எந்த அளவுக்கு சரியாக நாம் புரிந்து செயல்படுகிறோமோ அந்த அளவுக்குத்தான் ஊழியத்தின் நிறைவானது நிர்ணயிக்கப்படும்.
நற்செய்தியைக் கேட்டு இரட்சகர் இயேசுவிடம் தம் வாழ்வைக் கையளித்திருக்கும் ஒவ்வொரு சீடனும் வேதத்திலே நாம் காணும் சீடர்களைப் போல் தத்தம் அருட்பணியாளர் பங்கை நிறைவேற்ற வேண்டும். ஆண்டவரின் ஒவ்வொரு விசுவாசியும் அவரின் சீடன். ஒவ்வொரு சீடனும் அருட்பணியாளன். அருட்பணி நம் வாழ்வின் உயிர் மூச்சு. அருட்பணியாளர் என்பது எல்லா விசுவாசிகளுக்குமான ஒரு பொது அடையாளம்.
அருட்பணியின் அடிப்படை
பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் (யோவான் 20:21) என்று உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வார்த்தைகள் நம்மை எதிர்நோக்கும் சூழ்நிலைகள். சவால்கள் எதிர்ப் புகளையும் சந்திக்கப் பெலன் தருகின்றன. பிதாவினால் அனுப்பப்பட்ட குமாரனுக்கு சிலுவை மரணம் கடினமாயிருந்தாலும் அதனை எடுத்துப்போடும்படி கேட்டாலும், பிதாவின் சித்தத்திற்குத் தம்மை விட்டுக்கொடுத்தார். விளைவாக சிலுவையில் பாவம். பிசாசு. உலகத்தை வெற்றி சிறந்தார். தாம் பெற்றுக்கொண்டதை நிறைவேற்றி முடித்த அவரின் மாதிரியை நம் கண் முன் நிறுத்தும்போது நம் தியாகங்கள் உபத்திரவங்கள் ஒரு பொருட்டாவதில்லை.
அருட்பணி
ஆண்டவரின் ஆளுகையை உள்ளங்களில், இல்லங்களில் வழக்கங்களில் வேலை இடங்களில் நிறுவுவதே நம் அருட்பணி ஆகும். இரட்சிப்பின் சுவிசேஷம் ஆத்தும, சரீர, சமுதாய ரீதியில் தாக்கத்தை உண்டாக்கி மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. சரித்திரத்தின் பக்கங்கள் இதைப் பறைசாற்றுகின்றன.
ஆண்டவர் தரும் விடுதலையைத் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் அனுபவிக்கச் செய்வதே அருட்பணியாகும் நற்செய்திப்பணியும். நற்பணிகளும் நம் தேசத்திற்கு உயிரோட்டத்தைத் தந்திருக்கின்றன. இதற்காக மிஷனரிமார் செலுத்தின விலைக்கிரயம் மிகவும் அதிகம் என்பதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது.
அருட்பணி என்பது புதிய ஏற்பாட்டில் பூத்ததல்ல: பழைய ஏற்பாட்டில் திரித்துவத்தில் தொடங்கியது. பரிசு த்த வேதாகமம் சிருஷ்டிப்பில் தொடங்கி புது சிருஷ்டியில் (Creation to New Creation) முடிவடைகிறது. பிதா. குமாரன். பரிசுத்த ஆவியாக திரியேக தெய்வமே தம்மை அருட்பணியில் ஈடுபட்டிருப்பதை நாம் காணலாம். வேதாகமம் ஒரு அருட்பணியின் புத்தகம் என்று சொன்னால் அது சரியாய்ப் பொருந்தும்.
அருட்பணியின் உத்திரவாதம்
அருள் பிரசன்னம். தூய ஆவியானவரின் வல்லமை நமக்கு பூமியின் எல்லை மட்டுமல்ல. காலத்தின் எல்லை-ல மட்டும் நிச்சயமாக உண்டு. இந்த இறை ஏதுக்கள் ஒரு போதும் வற்றாதவை. அவரின் பெலத்தில் அவரின் உந்துதலில் இயங்கும் உன்னத அனுபவம். கீழ்ப்படியும் யாவருக்கும் சொந்தம். இவற்றை முழுமையாகச் சார்ந்தவர்கள் சாதித்தது பலப்பல. எந்த ஒரு அருட்பணியாளர் நம் மனக்கண் வந்தாலும் அவர்கள் வாழ்வின் யதார்த்தம் இவைகளே.
UESI இன் அருட்பணி நோக்கம்
ஆண்டவரின் அருட்பணிக் கட்டளையை முன்னிறுத்தி உலக சுவிசேஷமயமாக்குதலில் தங்களுக்கான தேவ சித்தத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் கீழ்ப்படியவும் செய்வது.
அருட்பணி நோக்கத்தின் சாராம்சம்:
- அருட்பணியானது ஒவ்வொரு விசுவாசியும் கீழ்ப்படிய வேண்டிய கட்டளை.
உலக நற்செய்திமயமாக்குதலில் ஒவ்வொரு விசுவாச மாணவருக்கும். பட்டதாரிக்கும் நிச்சயப் பங்குண்டு. - வாய்ப்புகள் ஏராளமானதால் குறிப்பிட்ட பங்கைக் கண்டுபிடிப்பது அவசியம்.
- அறிந்து உணர்ந்து கொண்டபின் கீழ்ப்படிதல் மற்றும் அதற்குத் தேவையான ஆயத்தமும் அவசியம்.
- இதுவே ஒரு விசுவாசியின் உயர்ந்த லட்சியமாக மாற வேண்டும். வாழ்வின் அனைத்து முன்னுரிமைகளும், தெரிந்தெடுப்புகளும். அதனைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.
- கீழ்ப்படிதல் என்பது எதிர்கால அனுபவம் மட்டுமல்ல. இப்போதிருந்தே காணப்பட வேண்டிய முக்கியப் பண்பாகும். நீங்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியாக இப்போது இல்லையென்றால் கடவுள் உங்களை எதிர்காலத்தில் வேறொரு இடத்தில் கலங்கரை விளக்காக வைக்க முடியாது.
ஆண்டவர் கொடுத்த பாரத்திற்கேற்றபடி அதனைச் சார்ந்த செய்திகள். புள்ளிவிபரங்கள். நடப்பு நிலவரங்களை உற்றுக் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் முழங்காலிட வேண்டும். மற்றவர்களையும். மன்றாட அழைக்க வேண்டும்
மாணவ அருட்பணியாளர் ( Missionary Student )
ஒரு விசுவாச மாணவர் தம் சொந்த ஊர். மொழி தாண்டி ஒரு தேவைமிகு வளாகத்தைத் தேடி அங்கே மேற்படிப்பைத் தொடரும்போது அவர் மாணவ அருட்பணியாளர் ஆகிறார். அவரது சாட்சியின் சாரம் இயேசுவே அதன் காரணர் என்பதை மற்ற மாணாக்கர் புரிந்து கொள்ள எளிதில் உதவும். இவ்விசுவாச மாணவரின் வழியாக இயேசுவின் பிரகாசம் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கும்.
இன்றும் ஊழியம் செறிந்த மாநிலங்களிலிருந்து சந்திக்கப்படாத மாற்றுக்கலாச்சார வளாகங்களை நோக்கிச் செல்லும் விசுவாச வீரர்கள் மூலம் அநேகர் இயேசு என்ற நாமத்தை முதல் முறையாகக் கேள்விப்படுகிறார்கள். ஒரு பட்டதாரிகூட நு ழைவதற்குக் கடினமான வாசல்கள் இவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கின்றன.
கூடாரத்தொழில் புரிவோர்(Tentmakers)
தேவைமிக்க ஒரு கலாச்சார இடத்திற்கு இடம்பெயர்ந்து தம் முயற்சியிலேயும். மூலதனத்திலேயும் ஊழியத்தை நிறைவேற்றும் பட்டதாரிகளைக் கூடாரத்தொழில் புரிவோர் என அழைக்கிறோம். அவரவர் பணியிடத்தில் சத்திய த்திற்குச் சான்றாய் விளங்கும் இவர்கள் தங்கள் அலுவலக நேரத்திற்குப் பின் மாணவர்களைச் சந்திப்பதிலும் படைமுயற்சிகளிலும் முனைப்பாகின்றனர்.
அருட்பணிக்கு ஜெபம் ஒரு தூண்டுகோல். நம்மையும் தூண்டி எழுப்பும். மற்றவர்களையும் உந்தித்தள்ளும். எந்த அளவுக்கு இதைப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்குத் தாக்கத்தை நம்மிலும் நம் மூலமாகவும் காண முடியும்.
ஆண்டவரே ஆசீர்வதியும் என மேலெழுந்தவாரியாக ஜெபத்திற்குப் பதிலாக தேசத்தின் குறிப்பிட்ட தேவைகளுக்காக இந்த ரீதியில் செய்யப்படும் / திட்டமிடப்படும் அருட்பணி முயற்சிகளுக்காக. மக்களைப் பிடித்திருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக. அவற்றிலிருந்து மக்கள் விடுதலையை அனுபவிக்க குறிப்பறிந்து ஜெபிக்கலாம்.
வேத ஆராய்ச்சி
EU – EGF குழுக்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை யாவது அருட்பணி குறித்த வேத ஆராய்ச்சி. அருட்பணியாளர் சரிதை போன்றவை இடம்பெறுமென்றால் அருட்பணிக்கான நம் பங்கைத் தெரிந்துகொள்ளவும். அதில் முன்னேறவும் ஏதுவாகும். பணித்தளம் பார்வையிடல் வேற்றுக் கலாச்சார சுவிசேஷ ஊழியக் களம் மற்றும் கல்லூரிகளால் நிறைந்த தேவை மிக்க இடங்களை நேரில் கண்டு அதன் விவரங்களை நேராகக் காண்பது ஒரு தாக்கத்தை உண்டாக்கும்.
தீர்மானம் எடுத்தலையும் தீவிரப்படுத்தும். பல்வேறு வழிகளில் தேவைகளையும். அழைப்பையும் குறித்துப் பேசவும். கேள்விப்படவும். தெரிந்துகொள்ளவும். வாய் ப்புக்களை அதிகரிப்பது அருட்பணியில் பங்கை ஆழமாக்கும்.
அருட்பணித் தணல்
ஒவ்வொரு மாவட்டமும் தத்தம் பங்காளர் மாநிலத்திற்கு ஒரு குழுவை ஆண்டுதோறும் அனுப்புவது நல்ல வாய்ப்பாகும் பல்வேறு அருட்பணிகள் குறித்துப் பத்திரிக்கைகள் மூலமாக அருட்பணியாளர்களைப் பேச அழைப்பதன் வாயிலாகவும் அறி ந்து கொள்வது. மாணவர்கள் அருட்பணிக்கு முன்வரத் தடையாயிருக்கும் சந்தேகங்கள். பயங்களைப் போக்கும். மாவட்ட அளவிலான. வட்டார அளவிலான அருட்பணிக் கூட்டங்கள். மாநில மற்றும் தேசிய அருட்பணி முகாம்களில் பங்குபெறு வதும் பேருதவியாக அமையும்.
ஒரு நாளின் பல்வேறு அலுவல்கள் மத்தியில் நம் அழைப்பு தைத் தவிர்க்க அடுத்தகட்ட ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கும். மறக்கப்படவோ. மறைக்கப்படவோ கூடும். திறந்த வாசலுக்காக ஜெபிக்க வேண்டும். அதோடு ஒரு மூத்த விசுவாசியின் ஆதரவு மிகவும் ஊக்கமளிக்கும்.
அனைவரும் அருட்பணியாளரே!
ஒவ்வொரு விசுவாசிக்கும் உரித்தான முழுநேர அழைப்புண்டு. ஒருவேளை ஊழியம் மற்றும் உலகப்பிரகாரமான வேலை என்று இரு பிரிவுகளாகப் பார்ப்பதைக் களைந்துபோட வேண்டும். அனைத்துப் பணிகளும். அனைத்துத் துறைகளும் ஆண்டவருடையவைகளே (சங் 24:1).
அருட்பணியில் ஆசிரியர்கள். பொறியாளர்கள். மருத்துவர்கள். பொருளாதார வல்லுநர்கள். போதகர்கள். வேதாகம மொழி பெயர்ப்பாளர்கள். ஊடகவியலார். அரசு உயரதிகாரிகள். சமூக சேவை செய்வோர் என அனைவருக்கும் பங்குண்டு. கல்வித்துறை, நீதித்துறை. அரசியல். திருச்சபை, சமுதாய முன்னேற்றப்பணி, பொதுத்துறைகள் என அனைத்துத் துறைகளிலும்நீதியின் சூரியனாம் இயேசுவைப் பிரதிபலிக்க நிமிர்ந்த நெஞ்சங்கள் தேவை. என்ன அழைப்பாயிருந்தாலும் ஆண்டவரின் நாமத்தை உயர்த்துவதும். செயல் மற்றும் சொல் மூலமாக அறிவிப்பதுமே மேலோங்கி நிற்க வேண்டும்.
UESI இயக்கமானது இத்தேசத்தின் தேவையைச் சந்திக்க சேவை செய்யும் சந்ததியை 1950களிலிருந்து எழுப்பிக்கொண்டிருக்கிறது. அது ஒரு தொடர் நிகழ்வாக இருக்கச் செய்வது அது நம் கரங்களில்தான் உண்டு. அருட்பணியாளர்களை உருவாக்கி அனுப்பும் இயக்கமாக UESI இந்திய மண்ணில் மட்டுமில்லாது எல்லைகளைத் தாண்டியும் தொடரட்டும்.
திரு.பா. ஜான் ஜெபராஜ் ஜேம்ஸ், சென்னை.
நன்றி: தரிசனச்சுடர் மார்ச் 2020
Daniel Dhinakaran.
Posted at 21:45h, 07 OctoberClear cut explanation about mission.