
28 May இராஜ்ய மேன்மைக்காய் – ஏமி வில்சன் கார்மைக்கல் (1867-1951)
“அம்மா…” இன்றும் இம்மென்மையான வார்த்தை தமிழ் மண்ணில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூரில் அதிகமாய் உச்சரிக்கப்படுகிறது. இம்மதிப்பிற்கு சொந்தக்காரர் அயர்லாந்து தேசத்தைச் சார்ந்த ஏமி வில்சன் கார்மைக்கல் ஆவார். “ஏமி” நம்மில் அனைவருக்கும் பரிச்சயமான நபர் எனினும் அவரது 150ஆவது பிறந்த நாளை டிசம்பர் 16 அன்று நினைவுகூறும்போது, அவரது வாழ்வின் முக்கிய தருணங்களையும் நம் நினைவில் கொண்டுவருவது மிகவும் ஏற்புடையதே.
துடிப்பும், குறும்பும், இளமையில் நிரம்பப்பெற்ற ஏமி, பாரம்பரியமிக்க கிறிஸ்தவ பெற்றோரால் கிறிஸ்தவ விசுவாசத்தில் கண்டிப்புடன் வளர்க்கப்பெற்றார். இயற்கையின் படைப்புகளை ரசித்து வாழ்ந்த ஏமி, சிறுவயது முதலே படைப்பாற்றல் மிக்கவராய் (குறிப்பாக கவிதைகள் எழுதுவதில் திறமை மிக்கவராய்) இருந்தார். இளம் வயதில் தன் வீட்டின் அருகாமையிலிருந்த மாணவர்களுக்கு வேத வகுப்புகள் எடுத்தார்; சமூகத்தில் கீழ்மட்டத்திலிருந்த “ஷாலிஸ்” என்னும் பெண்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவித்தார். “கெஸ்விக்” என்னும் அமைப்பினரின் கூடுகைகளின் மூலம் ஆவிக்குரிய வாழ்வில் அதிக பலம் பெற்ற ஏமி அங்குள்ள வில்சன் என்பவரின் வளர்ப்பு மகளானார். தன்னுடைய ஆவிக்குரிய வாழ்வில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளை, நாள் மற்றும் வருடங்களைக் குறிப்பிட்டு எழுதிவைத்துக்கொள்வது ஏமியின் வழக்கம். அவ்வாறு அவர் தம் வாழ்வில் மறக்கமுடியாத நாளாய், 1892ஆம் ஆண்டு, ஜனவரி 13ஆம் நாளைக் குறிப்பிடுகிறார். ஆம்! ”நீ போ” என்னும் கட்டளை பெற்ற தினமே அது. இதனைத் “தன்னால் மறக்கமுடியாத. தப்பமுடியாத கட்டளை அது” என்று குறிப்பிடுகிறார் ஏமி. மறுநாள் தன் தாயாருக்கு கடிதம் எழுதி, கர்த்தரின் பணி செய்யத் தன்னைத் தன் தாயார் ஒப்புக்கொடுப்பார்களா எனக் கேட்கிறார். கிறிஸ்துவின் மேல் பற்றும், விசுவாசமும் கொண்ட அத்தாயார். “இவ்வளவு காலம் உன்னை என்னிடம் தந்த கர்த்தர், இப்பொழுது தம் பணி செய்ய உன்னைக் கேட்கும்போது, நான் எவ்வாறு மறுப்பு தெரிவிக்க முடியும்?” என தன் மனப்பூர்வமான சம்மதத்தைக் கடிதம் மூலம் தெரிவிக்கிறார். இறையரசை விஸ்தரிக்க தாயாரும் மகளும் அர்ப்பணித்த அர்ப்பணிப்புதான் என்னே!
“போ!” என்ற கட்டளைக்கு கீழ்ப்படியத் தயாரான ஏமிக்கு, “எங்கே?” போவது என்று தெரியவில்லை. தேவையோடிருந்த இலங்கை, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அவர் முன் வந்தது. சீனா செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், சீன உள்நாட்டு அருட்பணி மருத்துவர்கள் அவர் உடல்நிலையைக்கண்டு அவரைச் சீனாவுக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.
ஆனால் அருட்பணிக்குத் தன்னை அப்ப்பணித்த எமி 1893ஆம் ஆண்டு ஜப்பானில் “மாட்சுயி” என்னும் இடத்தில் கிறிஸ்துவை அறிவிக்கச் சென்றார். வேறுபட்ட கலாச்சாரம் உள்ள நாட்டில் ஏமி எளிதாக அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில் அவரது மொழி, உடை, பழக்கவழக்கங்களைக் கண்டு அநேகர் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். மீளாகிசன் என்னும் பெண்ணுடன் இணைந்து தன் பணியைத் தொடங்கினார் ஏம். ஜெபம் அவரது ஊழியத்தின் அஸ்திபாரமாயீற்று அசுத்த ஆவி பிடித்த மனுஷளைத் தன் விசுவாச ஜெபத்தின் மூலம் சுமமாக்கினதால் அய்மனிதனும் அவன் மனைவியும் இரட்சிக்கப்பட்டர் பல இடங்களில் அநேகரை இரட்சிப்புக்குள்ளாக நடத்தியதோடு மட்டுமல்ல; அவர்கள் தம் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சியடையவும் ஏமி பெரிதும் உதவினார். “கர்த்தர் முன்னே செல்கிறார்” என்னும் வாக்குத்தத்தமே, அவர் தம் உழியப்பாதையில் முன்னேறிச் செல்ல ஊக்கமாயிற்று உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பினால் ஜப்பாளிலிருந்து சீனா வந்து, சிறிது நாட்கள் அங்கு தங்கி இளைப்பரி மீண்டும் ஊழியம் செய்ய இலங்கை புறப்பட்டார். இலங்கையில் சிறிது நுட்கள் அருட்பணியாற்றியவர், நன்னை வளர்ப்பு மகளாகக் கருதிய வில்சன் அவர்களின் உடல்நலக்குறைவினால் அவரைக் காண தாயகம் திரும்பினார். அங்கீருக்கும்போது அவரது நண்பர் ஒருவர் இந்தியாவில் உள்ள (பெங்களூரு) ஒரு மருத்துவமளைக்கு வரும்படி அழைப்புவிடுத்தா.
1895ஆம் ஆண்டு இந்திய மண்ணில் கால் பதித்த ஏமி முதன் முதலில் பெங்களூரு மிஷன் மருத்துவமனையில் பணியாத்தினார். தனக்குக் கிடைக்கும் தருணங்கள் ஒவ்வொன்றையும் அப்செய்தி அறிவிக்குப் பயன் டுத்தினரர். தனது மேற்கத்திய நாகத்தின் மேல்தட்டு
வாழ்க்கை முறையை வெறுத்தார்; தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தமிழ் மொழியைக் கற்பது மிகவுட் கடினமாயிருந்தது. இதனிடையில் கோடை காலத்தில் கோத்தகிரி, ஊட்டி போன்ற கோடை ஸ்தலங்களுக்குத் தன் குழுவினதுடன் சென்ற ஏமி அங்குள்ள மலைவாழ் மக்களை அடிக்கடி சந்தித்தார். அந்நாட்களில் திருநெல்வேலியை மையமாக கொண்டு போதகப் பனியாற்றிய தாமஸ் உவர்க்கம் போதகரைச் சந்திக்a தாட்டது அது அவரது வாழ்வின் திருப்புமுனையாயிற்று.
உவாக்கர் ஐயரின் வேண்டுகோளின்படி திருநெல்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் அழியம் செய்ய முன்வந்தார் ஏலி பண்ணைவிளைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குக் குழுவாகச் சென்று ஊழியம் செய்தனர். இவர்களுக்கு “நட்சத்திரக் கூட்டம்” என்னும் பெயர் வழங்கப்பட்டது. எதிர்ப்புகள் பல இருந்தபோதிலும், சில மனமாற்றங்கள் ஆங்காங்கே காணப்பட்டடை பல பெண்கள் கிறிஸ்துவை விசுவாசித்த போதும், அவர்கள் எதிக் கட்டுப்பாட்டினால் கிறிஸ்துவை அறிக்கையிடத் தயங்கினார். அவ்வாறு அறிக்கைவிடத் துனிந்தவர்கள் குடும்பத்தாரால் எதிர்ப்பைச் சந்தித்ததால் பண்ணைவிளை பங்களாவில் அடைக்கலம் தேடினர். அந்தாட்களில் தென் தமிழகத்தில் புரையோடியிருந்த “தேவதாசி” முறையில், பாதிக்கப்பட்ட சிறு பெண்கள் பலர் வமியின் கூட்டத்தைத் தேடி வந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுந்து. அரவணைத்த ஏமி அவர்களுக்கு “அம்மா”வானார், உவாக்கரின் ஊழிய மாற்றத்தினிமித்தம் அவரோடு டோனாவூர் சென்ற ஏமியின் அழியதைலமும் அதுவே ஆயிற்று. அங்குள்ள ஆதரவயிற குழந்தைகளுக்கு அடைக்கலமானார்; அநேக இடைஞ்சல்களைச் சந்தித்தார்; அவமதிக்கப்பட்டாம்.
ஏமி டோனாவூரில் ஆற்றிய ஊழியங்களுக்கு இன்று அவ்வளாகத்தில் வாழ்வோரும், அங்கு வளர்க்கப்பட்டோரும், அநேக புத்தகங்களும் சாட்சி பருகின்றன. பல நாட்கள் நீதி மன்றங்களுக்கும் செல்ல நேரிட்டது. அந்நாட்களில் தென் தமிழகக் காணகப் பகுதிகளை அச்சுறுத்திக்கொண்டிருந்த “செம்புலிங்கம்” என்னும் கொள்ளையடிக்கும் தொழில் புரிந்தவனுக்கு ஏமீ கிறிஸ்துவை அறிமுகப்படுத்தி, அவனை இரட்சிப்புக்குள்ளாக நடத்தினார். 1931இல் அவர் தாம் ஊழியம் நிறைவேற்றச் சென்ற இடத்தில் தவறி விழுந்ததால் நடக்க முடியாதபடி பாதிப்புக்குள்ளானார். படுக்கையில் இருந்த நாட்களில் அநேக நூல்களை எழுதினார். அவரை அருகில் இருந்து கவனித்துக்கொண்ட சகோதரி “அவர் ஒருபோதும் தன் நிலையைக் குறித்து முறுமுறுத்தது இல்லை” என்று கூறுகிறார். அவர் தம் பரமபிதாவிடம் வேண்டிக்கொண்டதின்படியே 1951ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் நித்திரையிலேயே நித்தியரைத் தரிசிக்கச் சென்றார். அவர் விட்டுச் சென்ற இல்லம் இன்றும் அநேக பெண் பிள்ளைகளுக்கு அடைக்கலமாய் விளங்குகிறது.
“விக்டோரியன் கலாச்சாரம்” என்று தனிப்பெரும் பெருமிதங் கொள்ளத்தக்கதாக கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்த ஏமி கார்மைக்கல் அம்மையாரின் எளிமையும் அர்ப்பணிப்பும் அநேகருக்குச் சிறந்த வாழ்வினையும், அநேக ஆத்துமாக்களுக்குள் கிறிஸ்துவை விதைத்தது எனில் அது மிகையல்ல. கர்த்தர் நம் மூலம் செயல்படக் காத்திருக்கிறார். கீழ்ப்படிதலுடன் கூடிய அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறார்.அர்ப்பணிப்போமா?
நன்றி: தரிசனச்சுடர் 2017 டிசம்பர்.
A Chance to Die: Elisabeth Elliot (The life and legacy of Army Carmichael)
No Comments