தவறான போதனையை கண்டுபிடிப்பது எப்படி?

வேதாகமம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா என கண்டறிய

வேதாகமத்திற்கு சமமாக வேறு ஏதாவது அதிகாரத்தை வைத்திருக்கிறார்களா? (புத்தகம் அல்லது குறிப்பிட்ட தலைவர் அல்லது பிரசங்கியார்) இது தவறான போதனை.

எடுத்துக்காட்டு: Book of Mormon, Another Testament of Jesus Christ

1.  Mormonism (latter day saints)

2. Seventh day Adventist – ஏழாம் நாள் வேதம் – எல்லன் ஒயிட்

3. The Great Contrasy மைய கொள்கை, சொப்பனத்தை அடிப்படையாகக் கொண்டது.

வேதாகமம் உண்மை என்பார்கள். ஆனால், சரியான அர்த்தப்படுத்துதல், அந்த வேறு புத்தகத்திலோ அல்லது குறிப்பிட்ட தலைவரிடமோ இருப்பதாக கூறுகிறது – இது தவறான போதனை.

ஒரு குறிப்பிட்ட விசயமானது, முழுவேதாகமத்தோடும், தொடர்ச்சியான ஒற்றுமையை கொண்டிருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இது போதனையில் விலகல் என்று அழைக்கப்படும்.

எடுத்துக்காட்டு:

1.  செழுமை உபதேசம் (Prosperity Gospel)

2. மிதமிஞ்சிய கிருபை உபதேசம் (Hyper Grace)

3. சரீரத்தில் நித்திய வாழ்வு இப்போதே ஆரம்பிக்கிறது (Immortality)

ஒரு நபரது முதன்மையான வலியுறுத்தல், உணர்ச்சிகளின் மேல் இருந்தால் நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  அனுபவமே விசுவாசத்தின் அடிப்படை என்பது தவறானது.

உணர்வுகள் வித்தியாசப்படக் கூடியவைகள். ஒரு போதனை, அனுபவத்தில் மட்டும் ஊன்றப்பட்டிருந்தால், அது மாறக்கூடியதாக இருக்கும்.

இயேசுகிறிஸ்து தேவகுமாரன் மற்றும் மனுஷகுமாரன் – பரிபூரணமான தேவன் மற்றும் பரிபூரணமான மனிதன். இதில் ஒன்றை மறுதலிப்பது. 1 யோவான் 4: 2,3 மற்றும் 1 யோவான் 2:22,23 மற்றும் 2யோவான் 1:7

  • யெகோவாவுக்கு சாட்சிகள் – இயேசு முதல் சிருஷ்டி என்று நம்புவர்
  • Branham Good News Society – இயேசு மட்டுமே இயக்கம், வருகிற கிறிஸ்து பிரன்ஹாம், இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர் என்று நம்புவர்.
  • Children of God (Family of Love) – கடவுளின் பிள்ளைகள், அன்பின் குடும்பம்
  • இயேசு சிருஷ்டிக்கப்பட்டவர் என்று நம்புவர். மூ கடிதங்கள்
  • The way international – அகில உலக வழி – இயேசுவின் தெய்வீகத்தை மறுதலிக்கிறது.
  • Christian Science – கிறிஸ்தவ அறிவியல் ( மனநிலை வைத்திய மையமானது) இயேசு மனிதனே என்று நம்புவர்

 

கள்ள போதகர்

  • சத்தியத்தை அறிந்தவர்கள்
  • தவறாய் போதிக்கிறேன் என்று அறிந்திருந்தும் அவ்வாறு செய்கிறவர்கள்
  • (சுயநல காரியங்களுக்காக, மனிதரைப் பிரியப்படுத்த, கிடைக்கும் பணத்திற்காக) 2பேதுரு2:1
  • சிலர் அறியாமையினாலே தவறான போதனை கொடுப்பார்கள் (அவர்கள் சரியான காரியங்களைத்தான் போதிக்கிறோம் என்று விசுவாசித்தவர்கள்) இவர்கள் கள்ள போதகர்கள் அல்ல.
  • கர்த்தருடைய பிள்ளைகள், இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பின் செல்ல மாட்டார்கள். ஏன் தெரியுமா? யோவான் 10:27; கூறுகிறது, என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கிறது. நான் அவைகளை அறிந்திருக்கிறேன்.

ஆண்டவருடைய சத்தத்தை அறிந்திருக்கிற ஆடு, கள்ள போதகருக்குப் பின் செல்லாது.

கள்ள போதனை =கொஞ்சம் சத்தியம் + அதிக பொய் (ஓரளவு உண்மையிருக்கும்)

நூதன உபதேசத்திற்கு விலகி இருக்க தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார். அப்போஸ்தலர் 17:11

விசுவாசமுள்ளவர்களோ என்று சோதித்தறி. 2கொரிந்தியர்13:5

ஆவிகளை சோதித்தறி 1யோவான் 4:1,2

வேதாகமத்தை ஒரு வருடத்தில் பிரித்து முடிக்கும் முறையை அட்டவணையை பயன்படுத்திவாசி.

ஒரு தனிப்பட்ட வேதபகுதியை மொத்தத்தில் வேதம் என்ன சொல்கிறது என்ற வெளிச்சத்தில் தான் அர்த்தம் கொள்ள வேண்டும். முழுமையான பின்னணிக்கும் கவனம் கொடுக்க வேண்டும்.

கள்ள போதகர்களை

  • நமது வீடுகளில் ஏற்றுக்கொள்ளக்கூடாது
  • வாழ்த்துதல் சொல்லக்கூடாது 2யோவான் 1:10,11
  • அவர்களுக்கு தீங்கு செய்யக்கூடாது.
2 Comments
  • SMYRNA PALRAJ
    Posted at 12:53h, 15 October Reply

    It’s really an important article for today’s scenario……Thank you.

  • Samuel Somu
    Posted at 20:12h, 15 October Reply

    Praise the lord brother. Thanks for the msg…

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.