என் உள்ளத்தில் இயேசு

இயேசு கிறிஸ்து ஒரு நல்ல மனிதர் என்றும் மிகச் சிறந்தவராக இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்றும் பல மத நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்கள் இன்றும் நம்புகின்றனர். ஆனால் கிறிஸ்து நேற்றும், இன்றும். என்றும் இருப்பவர் என்பதும், அவர் மீண்டும் இந்தப் பூமிக்கு வருவார் என்பதும் மீட்கப்பட்ட கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்புமாக இருக்கிறது. இறைவனுக்கும், மனிதனுக்கும் அற்றுப்போயிருந்த உறவைத் திரும்பப் புதுப்பிப்பதற்காகவே இயேசு இந்த உலகில் வந்தார். கிறிஸ்துவுடன் ஏற்படுத்திக்கொள்ளும் ஓர் உன்னத உறவு மூலம் கிறிஸ்தவ வாழ்க்கை தொடங்குகிறது. அவருடன் ஆழமான, நெருங்கிய உறவை வைத்திருப்பதன் மூலம் ஒரு நிறைவான வாழ்க்கை மனிதனால் வாழ முடியும். கிறிஸ்துவின் மீதும், அவருடைய வார்த்தைகள் மீதும் ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய் மாறி, அவரை உள்ளத்தில் அழைத்து, நாம் அவருக்குக் கீழ்ப்படியும்போது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கை நம்மால் வாழ இயலும் .

கிறிஸ்துவின் போதனைகளில் நிறைந்திருந்தவை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்குமான உறவும், அதனடிப்படையில் உருவாகும் வாழ்க்கை முறையுமாகும். “நானே வழியும், சத்தி யமும், ஜீவனுமாயிருக்கிறேன்” என்று அறிவித்தார். “என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வருவதில்லை” (யோவான் 14:6) என்றார். அவரைப் போலவே, அவரைப் பின்பற்றுபவர்களும் அதைத் தைரியமாக அறிவித்தார்கள் “வேறொருவரிடமும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்பட வேண்டிய மற்றொரு நாமம் வானத்தின்கீழ் மனுஷருக்குள்ளே கொடுக்கப்படவில்லை” (அப். 4:12) என்றார்கள். இறைவனுடன் ஒப்புரவாகவும், நித்திய மீட்பை அடையவும் ஒரே வழி இயேசு மட்டுமே என்பதால், நமது கவனம் அவர் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

“இயேசு கிறிஸ்துவே வழி. நாம் வழி தவறிச் சென்றிருந்தால். அது இயேசு கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றதால்தான்.

இயேசு கிறிஸ்துவிடம் திரும்புவதன் மூலம் நாம் நல் வழிக்குத் திரும்புகிறோம்.

இந்த வார்த்தைகள் இறைவனைக் குறித்த ஒரு கோட்பாடு அல்லது அவருடைய ஆசீர்வாதங்கள் குறித்த ஒரு கருத்து மட்டுமன்று.மனிதர்களின் ஒரே வழி இதுதான்” என்று வெஸ்லி நெல்சன் என்பவர் கூறுகிறார்.

இந்த உண்மையை இயேசு தன்னுடைய போதனைகளிலும். பிரசங்கங்களிலும் வலியுறுத்தினார். அவரது உறுதியான கூற்றுகளைக் கவனியுங்கள்.

“ஜீவ அப்பம் நானே” (யோவான் 6:35,38)
“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” (யோவான் 8:12:9:5)
“நானே ஆடுகளுக்கு வாசல்” (யோவான் 10:7)
“நானே நல்ல மேய்ப்பன்” (யோவான் 10:11,14)
“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்”(யோவான் 11:25)
“நான் மெய்யான திராட்சச் செடி (யோவான் 15:1)

இயேசு வெறுமனே வார்த்தைகளால் போதித்து மக்களை வழிநடத்தவில்லை. அவர் அவர்களைத் தனிப்பட்ட முறையில் தன்னோடு வாழும்படிக்கு அழைத்தார்.

“வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28).

“என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்” (யோவான் 6:57).

“என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35).

“ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்” (யோவான் 7:37).

இயேசுவின் போதனைகளில் அவரே மையமாக இருக்கிறார். அவரின்றி அவருடைய போதனைகள் இல்லை. அவரையும் அவருடைய வார்த்தைகளையும் நாம் பிரித்துப் பார்க்க முடியாது. “எனக்கு இயேசு மட் டும் போதும்; அவருடைய வார்த்தைகள் எனக்குத் தேவையில்லை” என்று நம்மால் இருந்துவிட முடியாது. அவருடைய வார்த்தைகளை மறுதலிக்கும் போதோ அல்லது குறைக்கும்போதோ நாம் அவரைப் பெற முடியாது ( 8:38: $ 12:48: 14:23-24).

கிறிஸ்துவுடனான நமது உறவு மிகவும் முக்கியமானது. நமது நித்திய வாழ்வை அது நேரடியாகத் தீர்மானிக்கிறது என்பதால், நமது முழு வாழ்க்கையும் கிறிஸ்துவை மையமாகக் கொண்டதாக அமைய வேண்டும். ‘நீங்கள் மரித்துவிட்டீர்கள். உங்கள் ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது. நீங்களும் அவரோடேகூட மகிமையில் வெளிப்படு வீர்கள்” (கொலோ. 3:3-4) என்று கிறிஸ்துவை மையமாகக் கொண்டு வாழும் வாழ்க்கையின் மேன்மையை பவுல் எளிமையாக விளக்குகிறார். “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21). நான் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டேன்: இனி வாழ்வது நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார். நான் இப்போது மாம்சத்தில் வாழும் வாழ்க்கை, என்னை நேசித்து, எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசத்தினால் வாழ் கிறேன்” (கலா. 2:20) என்று மீண்டும் அதை உறுதிப்படுத்துகிறார்.

மேற்கூறிய வசனத்தின் பிந்தைய பகுதியை சற்றுக் கூர்ந்து கவனி யுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவராக இருந்தால் நீங்கள் இனி வாழ மாட்டீர்கள். உங்களில் வாழ்பவர் கிறிஸ்துவே. உங்களை நேசித்து, உங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்து வாழ்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை கிறிஸ்துவுடன் மிகவும் பிணைக்கப்பட்டுள்ளது. அவர் உங்களாலும், நீங்கள் அவராலும் வாழ்கிறீர்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் “நான் இனி வாழவில்லை. முன்பு வாழ்ந்த நான் இப்போது இறந்துவிட்டேன். மாறாக, கிறிஸ்து என்னில் வாழ்கிறார். நான் கிறிஸ்துவில் ஒரு புதிய படைப்பு, ஒரு புதிய நபர். என் புதிய வாழ்க்கை கிறிஸ்துவின் விசுவாசத்தால் அமைகிறது.கிறிஸ்து என்னில் வாழ்வதால் எல்லாமே இப்போது புதிதாகவும் மாற்றமாகவும் உள்ளது.

“கர்த்தரோடு இசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” (1 கொரி. 6:17) என்று பவுல் இந்த அற்புதமான உண்மையை உரைக்கிறார். ஆன்மீக உறவுகளில் இதுவே நெருங்கிய உறவு.  இயேசுவோடு இசைந்திருக்கும் வாழ்வே உண்மையான, முழுமையான வாழ்வு. கிறிஸ்து நம் வாழ்க்கை, வாழ்க்கையே கிறிஸ்து என்ற வாழ்க்கையே ஓர் அற்புதமானவாழ்க்கை. நாம் அப்படிப்பட்ட ஒருவாழ்க்கையைத் தான் வாழ்ந்து வருகிறோமா? கிறிஸ்து என்னில் வாழ்கிறார் என்று நேர்மையாக சொல்ல முடியுமா?

மனிதர்களுக்கு ஒரு முழுமையான வாழ்வைத் தருவதே கிறிஸ்துவின் நோக்கம். “அவைகளுக்கு ஜீவன் உண்டாகியிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்” என்று இயேசு சொன்னார் (யோவான்10:10). கிறிஸ்துவுடனான நமது வாழ்க்கை நிறைவானதும் பூரணமானது மாக இருக்கிறது. கிறிஸ்துவை நமது உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது நம்முடைய உள்ளத்திலே பரிசுத்த ஆவியான கடவுள் செயல்படத் தொடங்குகிறார். பாவத்திலிருந்து விலகியோடுவதற்கான ஆற்றலை நாம் பெறுகிறோம். கிறிஸ்து நமது உள்ளத்தில் இருக்கும்போது இவ்வுலகிலே என்னென்ன துன்பங்கள் வந்தாலும், பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை யெல்லாம் வெற்றிகொண்டு முன்னேறுவதற்கு ஆற்றல் கிடைக்கிறது. அதுமட்டுமன்றி நித்தியமான, அழிவில்லாத மோட்ச வாழ்க்கைக்கு அது நம்மை வழிநடத்திச் செல்லுகிறது.

பாவங்களை அறிக்கையிட்டு கிறிஸ்துவைத் தன் உள்ளத்தில் அழைத்து அவரை ஆண்டவரும் மீட்பருமாக ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவரையும் அவர் மன்னித்து தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்கிறார்.

கிறிஸ்து நமது உள்ளத்தில் இல்லாத வாழ்க்கை அல்லது அவரை மையப்படுத்தாத வாழ்க்கை வெறும் வெற்று வாழ்க்கையே. இந்த உலக வாழ்க்கையை அது அர்த்தமற்றதாக்குவதுடன், நித்திய நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது. ஏனெனில் இந்தப் பிரபஞ்சமும், மனிதர்களும் இறைவனுடைய படைப்புகளாகும். மனிதன் தன்னுடன் எப்போதும் இருக்கவே தேவன் விரும்புகிறார். பாவத்தினால் தன்னை விட்டு விலகிச் சென்ற மனித குலத்தை மீட்பதற்காகவே இறைவன் மனித உருவில் பூமிக்கு வந்தார். “தேவன், தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்” (யோவான் 3:16) என்று பைபிள் சொல்லுகிறது.

கிறிஸ்து உங்கள் சொந்த வாழ்க்கையின் மையமாகவும் அனைத்துமாகவும் இல்லாவிட்டால், அவர் உங்கள் வாழ்விற்கான காரணம் இல்லை என்றால் நீங்கள் அவரிலும், அவர் உங்களிலும் நிலைத்திருக்கவில்லை என்றால், தயவுசெய்து திறந்த உள்ளத்துடன் ஏற்றும்கொள்ளும் மனதுடனும், தேடலுடனும் முன்னோக்கிச் செல்லுங்கள். இதுவே உங்கள் மன்றாட்டாக இருக்கட்டும்.

கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்ட, பாவங்களிலிருந்து மீட்கப்பட்ட அனைவருக்கும் இன்னொரு வாழ்க்கை இருக்கிறது. மனிதர்களை மீட்பதற்காக கிறிஸ்துவின் முதல் வருகை அமைந்தது. மனி தர்களை நியாயந்தீர்ப்பதற்காக அவரது இரண்டாம் வருகை அமையும். அந்த வருகையிலே அவருடையவர்கள் அவரோடுகூட மோட்சத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அந்த வருகையை நோக்கி எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதும், தன்னையும், பிறரையும் அந்த மோட்ச வாழ்க்கைக்குத் தகுதியுள்ளவர்களாக மாற்றுவதுமே கிறிஸ்தவ வாழ்க்கை.

 

No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.