போர்னோகிராபியிலிருந்து காப்பாத்துங்க! ப்ளீஸ்!

இணைய தளம் மற்றும் கைபேசியில்,  பாலியல் காட்சிகளைப் பார்ப்பது, அடிமைப்படுத்தும் தீய பழக்கமாகும்.  ஹெராயின் போதை பொருளுக்கு, அடிமையாவதற்கு சமமானது. இது பாவம். (மத்தேயு 5: 28). இச்சை இல்லாமல் பாலியல் காட்சி பார்க்க இயலாது.

“இணையதள பாலியல் காட்சிகள்,  உடலளவில் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். மனதிலும், உணர்ச்சிகளிலும், பல வடுக்களை உருவாக்குகிறது.” மறுபடியும் பிறந்தவரும், இப்பாவத்திற்கு அடிமையாவது சாத்தியமே!

கிறிஸ்துவுக்குள் இருக்கும், பிசாசினால் வஞ்சிக்கப்பட்டவர் கூறுவது.

  • இப்பாவத்திலிருந்து நான் வெளிவரவே முடியாது.
  • இதனாலென்ன? எல்லாரும் தான் இதை செய்கிறார்கள்.
  • நான் செய்வது, ஒருவரையும் காயப்படுத்துவதில்லை.
  • இது என் பெலவீனம்.
  • இது என் மாம்சத்தில் உள்ள முள்.
  • எனது துணை மறுப்பதால், ரிலீஸ் பண்ணுவதற்காக, தேவன் என்னை புரிந்து கொள்வார்.
    இது வஞ்சிக்கப்பட்ட ஒருவரின் உலக கண்ணோட்டம்.

 

பாலியல் காட்சிக்கு அடிமை ஏற்படக் காரணம்

  • தனிமை
  • தீய தேர்ந்தெடுப்புகள்
  • மனதில் இருக்கும் பாவம்
  • வஞ்சிக்கப்படுவதால் (சாத்தானால்)

 

விளைவு

  • தேவனோடுள்ள ஐக்கியம் பாதிக்கும்.
  • குற்ற உணர்வு, வெட்கம்.
  • அசுத்த ஆவிகளை வரவழைக்கும்.
  • மூளை வேலை செய்யும் அளவை குறைக்கும். (இயற்கை அழகு ரசிக்க, மூளை மறுக்கும்)
  • இயற்கையாக உள்ள ஆண்-பெண் கவர்ச்சியை, குறைத்துக்கொண்டே போகும்.
  • அதிக அடிமைத்தனம் கவர்ச்சியை, இழந்துவிடச் செய்யும்.
    ரோமர் 1:24,26,27

 

இப்பாவ வீழ்ச்சியின் படிநிலைகள்

1.அறியும் கட்டம்

  •  திடீரென பாலியல் காட்சியைப் பார்க்க நேரிடுகிறது.
  •  அறிந்து கொள்ளும் ஆவலினால் செய்த பாவம்.

 

விடுதலைக்காக

  • இடறி விழச் செய்யும், எதையும் அகற்ற வேண்டும். (மத்தேயு 18:9)
  • கண்களோடு உடன்படிக்கை பண்ண வேண்டும். யோபு 31:1
  • கண்களை, இருதயத்தை, எல்லாக் காவலோடும் காத்துக்கொள்ள வேண்டும்.

 

2.பழக்கக் கட்டம்

  • தொடர்ந்து பார்க்கும்போது, மெதுவாக, பழக்கக்கட்டத்திற்குள் வந்து விடுவீர்கள்.
  • இப்போது பாலியல் காட்சிகளைப் பார்ப்பதினால், உங்களுக்கு ஒருவித சந்தோஷமும், திருப்தியும் கிடைக்கும் என நம்ப ஆரம்பிக்கிறீர்கள்.

 

விடுதலைக்காக

  • கணக்கொப்புவிக்க, ஒரு நல்ல மென்டார் அல்லது வாழ்க்கைத்துணையோடு, ஜெபிக்க வேண்டும்.
  • சேர்ந்து ஜெபிக்க வேண்டும்.
  • சபையில் அல்லது ஊழியத்தில் அல்லது சேவையில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.
  • திறமைகளைக் கண்டுபிடித்து பயன்படுத்த வேண்டும்.

 

3.அடிமையாகும் கட்டம்:

  • இப்பழக்கத்தை, விட்டுவிட முடியாததால் பார்க்கிறீர்கள்.
  • இப்போது, அது உங்கள் எஜமானாகி விட்டது.

 

விடுதலைக்காக

  • இயேசு கிறிஸ்துவோடு, நெருங்கி வாழ்ந்தால், வெற்றி பெறலாம்.
  • பரிசுத்த ஆவியானவரைச் சார்ந்து வாழுவதன் மூலம், வெற்றி பெறலாம்.
  • நீங்கள் எந்த கட்டத்தில் இருந்தாலும், தேவனால், விடுவிக்க முடியும்.
  • “இயேசுவோடு நெருங்கி வாழ்ந்தால் மட்டுமே,  முழு வெற்றிக்கு உத்திரவாதம்”
  • உங்கள் வாழ்க்கைத் துணைக்கு (திருமணமாகாதவர் எனில், வருங்கால வாழ்க்கைத் துணைக்கு) உண்மையாக,உத்தமமாக (பாலியல் ஆர்வத்தை சேர்த்து வையுங்கள்) இருக்க வேண்டும் என்கிற எண்ணம், உங்களை பாதுகாக்கும்.
  • பரிசுத்த ஆவியானவர், உங்கள் வாழ்வில் செயல்பட, அனுமதிக்கும்போது, வெற்றி நிச்சயம்.
  • “இணையதளத்தில் பார்ப்பதை விட, நிஜ உலகத்தில், திருமண அமைப்புக்குள் இருக்கும் பாலியல் வாழ்க்கை ஸ்வாரசியமானது, செழுமையானது, திருப்தியானது, தேவனை பிரியப்படுத்துவது, மகிமைப்படுத்துவது “
  • விடுதலை பெற்ற பின்னரும், மறுபடியும் வீழ்ந்துவிடக் கூடும்.
  • இப்போது முன் நிலைமையை விட, அடிமைத்தனம் அதிகமாகிவிடும்.
  • ஆனாலும், தேவன் உங்களை நேசிக்கிறார்.
  • நீங்கள் எப்படி இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், நீங்கள் இருக்கிற வண்ணமாகவே தேவன் நேசிக்கிறார்.
  • நீங்கள் மறுபடியும் எழுந்து, பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நோக்கிச் செல்ல வேண்டும்.
  • விடுதலை (அடிமைத்தன அளவு, மன மறுரூபம் சார்ந்த) சிலருக்கு, உடனடியாக, அற்புதமாக கிடைக்கலாம்.
  • சிலருக்கு, படிப்படியாக, விடுதலை கிடைக்கலாம்.
  • சிலருக்கு ,நீண்ட காலத்திற்குப் பின் விடுதலை கிடைக்கலாம்.

 

தேவன் நீங்கள் எத்தனை முறை விழுந்தாலும் கைவிடமாட்டார், மன்னிப்பார். ஆனால் பாவம், அதனுடைய பின்விளைவை செய்யும்படி, தேவன் அனுமதிப்பார்.

1 Comment
  • Wilsonlightshine
    Posted at 22:35h, 28 October Reply

    Good News

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.