ஹோமோசெக்ஸ் பாவமா?

தங்கள் பாலினத்தைச் சேர்ந்தவர்களுடன் சரீர உறவு கொள்வது.

உலக கண்ணோட்டம்

  • ஓரினச் சேர்க்கையை, இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது.
  • ஓரினச் சேர்க்கை – நோய் அல்ல, மாற்று வாழ்க்கை முறை அல்ல, உனது தேர்ந்தெடுப்பு

 

ஓரினச் சேர்க்கை ஏற்படக் காரணம்

  • தகப்பன் இல்லாத நிலை
  • அலட்சியம் செய்யப்படுதல்
  • தாயின் அதிகாரம்
  • பெற்றோராலோ, மற்றவர்களாலோ, பலாத்காரம் செய்யப்பட்டதினால்
  • ஆண்கள் பாதுகாப்பற்றவர்கள், நான் பெண்களோடேயே உறவு வைத்துக்கொள்கிறேன்
  • பெண்கள் பாதுகாப்பற்றவர்கள், ஆண்களிடமே நான் உறவு வைத்துக்கொள்கிறேன்

 

வேதாகம கண்ணோட்டம்

  • ஆண், பெண் பால்வேறுபாடு தேவனுடைய படைப்பின் செயல் – ஆதியாகமம் 1:27
  • ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணத்திற்குள் பாலுறவை அனுபவிப்பதே, தேவனின் திட்டமாகும்.
  • தேவன், யாரையும் ஓரினச் சேர்க்கையாளராக படைக்கவில்லை.
  • இது மனிதன் கண்டுபிடித்த உபாய தந்திரம் – பிரசங்கி 7:29, ஆதியாகமம் 1:27
  • ஓரினச் சேர்க்கை சரீரத்திலும் (நோய்கள் – எய்ட்ஸ்) ,ஆத்துமாவிலும் ( குற்ற உணர்வு, தன்னியல்பில் பாதிப்புகள்) பேரழிவை உண்டு பண்ணுகிறது. மரண ஆக்கினை – ஆதியாகமம் 19:4-25, லேவியராகமம் 18:29, 20:13
  • உண்மையிலே, ஓரினச் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரையும், தேவன் நேசிக்கிறார்.
  • ஆனால் அந்த பாவத்தை (வெறுக்கிறார், நியாயந்தீர்க்கிறார்) அங்கீகரிக்கவில்லை (ரோமர் 1:27)
  • இயேசு கிறிஸ்துவை, விசுவாசிக்கிற எல்லாருக்கும் பாவ மன்னிப்பு, விடுதலை, தேவனோடு, விசுவாசிகளோடு ஐக்கியம் உண்டு.
  • ஓரினச் சேர்க்கையாளர்கள் அப்பாவத்தில் கட்டுண்ட அடிமையாக இருக்க வேண்டியதில்லை.
  • அவர்களுக்கும் விடுதலை உண்டு.
  • வேதத்தில், புதிய ஏற்பாட்டில் கொரிந்து பட்டணத்தில் இருந்த விசுவாசிகளில் சிலர் இப்படிப்பட்டவர்களாய் இருந்தார்கள்.
  • ஆயினும் அவர்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்தபோது, கழுவப்பட்டார்கள். நீதிமானாக்கப்பட்டார்கள், பரிசுத்தமாக்கப்பட்டார்கள் – 1 கொரிந்தியர் 6:9-11
  • இயேசுகிறிஸ்து என்ற நபரோடு, ஐக்கியம் கொள்ளும்போது, அவரை நேசிக்கும்போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் – 1 யோவான் 1:3)
  • இயேசுவை குறித்து, அறிந்து கொள்ள சுவிசேஷத்தை (மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) வாசியுங்கள், தியானியுங்கள், பின் மீதி புதிய ஏற்பாட்டினை வாசியுங்கள்.
  • ஒரு ஓரினச் சேர்க்கையாளருக்கு, ஊழியம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமானால், அந்த நடவடிக்கைகளை நிறுத்தும் அவர்களது போராட்டத்திற்கு, ஜெபத்தின் மூலம், கிறிஸ்தவ ஆலோசகர் மூலம், உதவி செய்யுங்கள்.
  • நம் மனதில் இருக்கும் கேலிகள் மற்றும் நியாயத்தீர்ப்புகளை அகற்றி, தேவன் நேசிப்பதுபோல, அவர்களை நேசிக்க வேண்டும்.

 

குறிப்பு:

  • அவர்களது பாலுறவு தெரிவை, நாம் கண்டித்து நியாயந்தீர்க்கக்கூடாது.
  • அவர்கள் தோல்வி (விழும்போதும்) காணும்போதும், அவர்களிடம் பொறுமையாகவும், நேசிக்கிறவர்களாகவும், ஏற்றுக்கொள்ளுகிறவர்களாகவும் இருங்கள்.

 

மனந்திரும்பிய ஓரின சேர்க்கையாளருக்கு ஆலோசனை

  • பழைய நண்பர்கள் குழுவை விட்டுவிட வேண்டும்
  • பழைய உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும்
  • பழைய தொடர்பு ஏற்படுத்திய இடங்களை தவிர்க்க வேண்டும்
  • புதிய நண்பர்கள், புதிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும்

 

தேவன் நீங்கள் எத்தனை முறை விழுந்தாலும் கைவிடமாட்டார்,
மன்னிப்பார். ஆனால், பாவம் அதனுடைய பின்விளைவை செய்யும்படி, தேவன் அனுமதிப்பார்.

No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.