24 Jul கடவுள் ஆணா, பெண்ணா?
கடவுளுக்கு, ஆண் பெயர்ச் சொற்களை, நாம் பயன்படுத்தினாலும், அவர் குறிப்பாக ஆண் அல்ல. ஒரு ஆள் தன்மை உடையவர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆண், பெண் ஆகிய இரண்டு சாரங்களும், இணைந்த ஒரு பரிபூரண ஆள்தன்மை உள்ளவர்.
அவ்வாறு இல்லை எனில், ஆண்கள் மட்டுமே, தேவனது சாயலில் உள்ளவர்களாக இருந்திருப்பார்கள். இது ஆதியாகமத்தில் உள்ள சிருஷ்டிப்பின் வரலாறுக்கு, முரண்பட்டதாக இருந்திருக்கும்.
தேவன், மனிதர்களை படைக்கும்போது, தமது சாயலில் தமது தன்மையின்படியும் படைத்தார்- ஆதியாகமம் 1:26,27. ஆணும், பெண்ணுமாகவே படைத்தார். ஆணும், தேவ சாயலில், தேவ தன்மையில் உள்ளனர். பெண்ணும், தேவசாயலில், தேவ தன்மையில் உள்ளனர்.
கடவுளை, பெண்பாலுக்குரிய தன்மையில் விளக்கும் வேதபகுதி
- ஓசியா 13:8, தாய் கரடி
- உபாகமம் 32:1,2 தாய் கழுகு
- உபாகமம் 32:18 பெற்றவர்
- ஏசாயா 66:13 தேற்றும் தாய்
- ஏசாயா 49:15 பேணும் தாய்
- ஏசாயா 42:14 பிள்ளை பெறுகிற தாய்
- மத்தேயு 23:37, லூக்கா 13:34 தாய் கோழி
தேவனுடைய குணாதிசயத்தில் (தன்மையில்), ஆண் பாலுக்குரிய தன்மைகளும், பெண் பாலுக்குரிய தன்மைகளும் வெளிப்படுகிறது.
ஆணும், பெண்ணும் தேவ சாயலாக, தேவ தன்மையுடன் இருப்பதால், தேவனுடன், இருவரும் தொடர்பு கொள்ள, ஐக்கியம் கொள்ள முடியும். தகப்பனைப் போல, சிட்சிக்கிறார்- நீதிமொழிகள் 3:12, இரங்குகிறார். சங்கீதம் 103:13.
இயேசுகிறிஸ்து – ஆண் பாலுக்குரியவர் . லூக்கா 2:21 (விருத்தசேதனம்) (20:28-36)
பாலின வேறுபாடு, இப்புவியில் மட்டுமே கொடுக்கப்பட்டது. லூக்கா 20:34-36
No Comments