17 Jul கல்வியில் வெல்லுவோம்!
மனசே ஆறவில்லை ஜெபாவிற்கு.
என்ன பேச்சுப் பேசிவிட்டான் பாலா…!
தேள் கொட்டினால் இப்படித்தான் வலிக்குமோ?
பாலாவும், ஜெபாவும் – முதுநிலைக் கணித மாணவர்கள்.
படிப்பில் முதல் மாணவன் பாலா. கேள்விக்கணைகளால் ஆசிரியர்களை வியர்க்க வைப்பான்.
ஜெபாவின் அன்பைத் தட்ட முடியாமல் எப்போதாவது ‘சாப்பல் ப்ரேயர் ஃபெல்லோஷிப் வருவான். பைபிள் ஸ்டடி, பாடல்களைக் கூர்ந்து கவனிப்பான். மீட்டிங் முடிந்ததும் கேள்வி மழைதான். ஏண்டா, ஜெபா -There is a Gap in the preaching and practice of Christians?
பாலா, நீ மனிதர்களைப் பாக்காத, ஜீஸஸ் க்ரைஸ்ட்டப் பாருடா என்றால்,
‘அது எப்படிடா? அவரப் பத்திப் பேசுற உன் லைஃப் சரியில்லன்னா எப்படிடா நான் இம்ப்ரெஸ் ஆவேன் ‘என்பான்.
– ஹாஸ்டல்ல எப்பவும் லேட் நைட்ல உள்ள வந்து வார்டன்ட்ட மாட்டுற ஜேம்ஸ்
– கெட்ட வார்த்தையை ரொம்பத் தாராளமா யூஸ் பண்ற மார்ட்டின்,
– சதா கேர்ள் ஃப்ரெண்டுக்கு றீனிl அனுப்புற விக்டர்,
– இடையில் ‘தண்ணி’ போட்டு, கலாட்டா பண்ணி பிரின்ஸ்பால்ட்ட செமத்தையா வாங்கி ஹாஸ்டலுக்கு குட் பை சொன்ன நியூட்டன்,
– மெஸ்ல கலாட்டா பண்ணி, காரியம் சாதிக்கிற கிருபா…
– பாலா கொடுத்த லிஸ்ட் கொஞ்சம் நீளம்தான்… ஜெபாவிற்கு டக்கென பதில் பேச நாவு வரவில்லை. எப்படியோ சமாளித்து விட்டான்.
முந்தா நாள், மெஸ் முடிந்ததும் கொஞ்சம் ஓரமாக இருட்டில் கிடந்த ஸ்டோன் பெஞ்சில் ஜெபா உட்கார்ந்திருந்தான்.
பக்கத்தில் கிடந்த இன்னொரு பெஞ்சில் இருந்து பாலாவின் குரல் உரத்துக் கேட்டது.
என்னடா கிறிஸ்டியன்ஸ் இவன்க, பாட்டு, ப்ரேயர்ன்னு முன்னால நின்னு கூத்தடிக் கிற நேரத்துல கொஞ்சத்தை படிக்க ஒதுக்குனா, அரியர் வாங்காம காலாகாலத்துல காலேஜை விட்டு டிகிரியோட வெளியே போகலாம். இதவுட்டுட்டு சாட்சி, வசனங்கறானுங்க…!
பக்கத்திலிருந்த கிருஷ்ணமூர்த்தி,
எக்ஸாம் டைம், ரிசல்ட் வர்ற நேரம் எப்படியாச்சும் பாஸ் பண்ணிறணும்னு கடவுளுக்கு ஐஸ் போட்டு அப்ளிகேஷன் அனுப்பத்தாண்டா இந்த ப்ரேயர் டைமே’ என்று கூறச் சிரித்து விட்டான் பாலா.
என்னவோடா பாலா, பெத்தவங்க பணத்தைக் கொட்டிப் படிக்க அனுப்புறாங்களே, அது வீணாகலாமான்னு யோசிச்சா எப்படிடா அரியர் வாங்க முடியும். காஸ்பல் மியுசிக், அவுட் ரீச்ன்னு கிட்டார். கீ போர்டோட அலயற நேரத்த கொஞ்சம் கொறைச்சாலே படிப்புல எங்கோ போயிறலாம்…?கிருஷ்ணமூர்த்திதான் தொடர்ந்தான். ஜெபாவிற்கு அதற்கு மேல் கேட்க முடியவில்லை. எழுந்து விட்டான். யோசித்தான். முதலில் பொங்கிய கோபம் வடிந்தபின், உண்மை சுட்டது. அவனே எல்லாப் பாடத்திலும் ஜஸ்ட் பாஸ்தான்.
பிஸிக்ஸ் படிக்கும் நத்தானியேல், செமஸ்டருக்கு ஒண்ணு, ரெண்டு அரியர்ஸ்.
கீ போர்ட் கிங்ஸ்லீ… இங்கிலீஷ் சாங்க்ஸ் – டான் மொயின் தொலைந்தார் அப்படி சூப்பரா பாடுவான், ஆனால் ஷேக்ஸ்பியர், மாடர்ன் லிட்டரெச்சரோட ரெண்டு தடவ போராடியும் தோல்விதான்! பாலா சொல்றது சரிதான். ஆனா, எங்கேயிருந்து தொடங்கி, எப்படி சரி செய்வது?
மனசு மட்டும் கூக்குரலிட்டது, ஆண்டவரோட புள்ளைங்க எல்லாம் ஃபர்ஸ்ட் ரேங்க் ஹோல்டரா இருக்கணும்னா பேதுரு. யோவான், யாக்கோபை என்ன செய்யிறது? ஆண்டவரே அவுங்களத் தள்ளலையே! அத்திப் பழம் பொறுக்குன ஆமோஸ் மூலமா ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களோட பேசினாரே!
ஒருத்தன் ‘ஸ்லோ லேனரா’ இருந்தா அவனக் கூறுபோட்டுப் பார்க்கலாமா?… கேள்வியால் மனம் நிரம்பியது.
எதேச்சையா சாயங்காலம் டயானா ஆன்ட்டி வீட்டுக்குப் போனான்.
அங்க்கிள் டானி பிடிச்சுக்கிட்டார். ஜெபா, ஃபுல் டைம் மினிஸ்ட்ரிக்கு ஒப்புக்கொடுத்துருக்கறதா ஆன்ட்டி சொன்னாங்க!
ஆமா அங்க்கிள் – தாழ்மையோடு கூறினான் ஜெபா!
என்ன பர்சன்ட்டேஜ் வச்சுருக்க ஜெபா?
சுருங்கிவிட்டான் ஜெபா ஃபுல் டைம் மினிஸ்ட்ரிக்கும் மதிப்பெண்களுக்கும் என்னசம்பந்தமோ?
தயக்கத்தோடு, 54 பெர்சன்ட் அங்க்கிள் என்றான்.
வாட் சைல்ட், ஒரு பர்ஸ்ட் கிளாஸ் கூட தேறலியா?
ஹிஸ்டரியில பி. ஹெச். டி வாங்கின இவருக்கு, தியரம், ஈக்வேஷனோட நான் படுறபாடு எங்கப் புரியப் போகுது -ஜெபா மனசுக்குள் முனங்கினான்…
கர்த்தரில உத்தமமா நடக்குற நீ, கல்வியில ஒரு நாளும் கீழ இறங்கக் கூடாது.
கல்லூரி – பல்கலைக் கழகத்துல – மற்ற மாணவர்களுக்குக் கிறிஸ்துவைப் பற்றிச் சொல்ல – சாட்சியான கல்வி வாழ்க்கையும் அவசியம் ஜெபா. நல்லாப் படிக்கிற மாணவர்கள் – படிப்புல ரொம்பத் தொய்வா இருக்கிற மாணவர்கள் ரெண்டு பேரையும் நீ ஒரே நேரத்துல கிறிஸ்துவண்டை வழிநடத்தலாம்.
ஞானத்தில் குறைவுள்ளவன் என்னிடத்தில் கேட்கக்கடவன், நானே ஞானமும், நீதியுமானேன்னு சொல்ற நம்ம தேவன்ட்ட உன்னோட அகடெமிக் சைடுக்காக ஜெபம்பண்ணு. ஞானத்துலயும், வளர்ச்சிலயும், மனுஷ தயவு, தேவ கிருபையிலயும் அதிகமதிகமாய் வளர்ந்த நம்ம ஆண்டவர்கிட்ட விசுவாசத்தோட கேட்கும்போது, ஞானிகளுக்கு மறைபொருளானதையும் பேதைகளாகிய நமக்கு வெளிப்படுத்துவார்.
உன்னோட ‘டை’மை நீ எப்படி யூஸ்பண்றன்னு செக்பண்ணு. பாதிப் பிராப்ளம் சால்வ் ஆயிடும் – அங்க்கிள் நிறுத்தினார்.
ஜெபாவின் தலையசைப்பில் அர்த்தம் இருந்தது.
இரவு ப்ரேயர் மீட்டிங் முடிந்ததும், டின்னர் டைமுக்கு அப்புறம் வழக்கமா ரூம், ரூம கவுன்சிலிங் பண்ணச் செல்லும் ஜெபா,
அன்று முதல்முறையாகத் தனது ரூமிலேயே அமர்ந்து, ஒரு அதிகாரம் பைபிளில் வாசித்து, ஜெபித்தான்.
அவன் கிளாஸ் ஓர்க் நோட்டைக் கையிலெடுத்ததும், பாலா புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாகப் பார்த்தான். சட்டை செய்யவில்லை ஜெபா. அந்த நாளின் பாடங்களையெல்லாம் முழுவதுமாக ரிவைஸ் பண்ண ஆரம்பித்தான்!
நன்றி : தரிசனச்சுடர்
Gracia
Posted at 12:38h, 22 OctoberVery nice, Praise God. Where can I read all of the Tharisana Sudar e-books online? Is it possible?
admin
Posted at 23:18h, 28 OctoberHi Gracia,
They are not available online as e-books. PDF versions are available.