மாஸ்டர்பேஷன் பண்ணலாமா?

உலக கண்ணோட்டம்

பசி எடுத்தால்,  சாப்பிடு. தாகம் எடுத்தால்,  தண்ணீர் குடி. செக்ஸ் ஃபீலிங் வந்தால், எப்படியாவது ரிலீஸ் பண்ணிக்கொள்.

மருத்துவ கண்ணோட்டம்

சுய இன்பம் மனதிலோ, சரீரத்திலோ எந்த தீமையையும் செய்வதில்லை

வேதாகம கண்ணோட்டம்

  • உனது சரீரம் (கணவன், மனைவி) இருவருக்கும் சொந்தமானது
  • நீ தேவனுக்குச் சொந்தம் – 1கொரிந்தியர் 6:20
  • பரிசுத்த தேவன், இந்த சரீரத்தில் வாழ விரும்புகிறார்
  • இந்த சரீரத்தை அசுத்தம் செய்யக் கூடாது
  • உனது சரீரம், உனது வாழ்க்கைத் துணைக்குச் சொந்தம் – 1கொரிந்தியர் 7:4
  • உன் வாழ்க்கைத் துணை தவிர, யாருக்கும், உன் சரீரத்தைக் கொடுக்கக்கூடாது
  • உன் துணைக்கு, சுகம் கொடுக்க வேண்டும், உனக்கு அல்ல, கொடுப்பதினால், சுகத்தை பெறுகிறாய்
  • உனது நேசம், உனது அன்பு, உனது காதல், அனைத்தையும், நமது நேசர் இயேசுவுக்காகவும், உன் வாழ்க்கைத் துணைக்காகவும், பாதுகாப்பாக, சேமித்து வைக்க வேண்டும்
  • இவ்வாறு சேமிப்பாக நீ வைத்திருந்தால், திருமண வாழ்வில் சரீர உறவு, அதிக நிறைவான மகிழ்ச்சியை, திருப்தியை உனக்குத் தரும். இதுவே தேவனது திட்டம்.

 

சில கேள்விகள்

  • உனது சிந்தனை வாழ்க்கை தூய்மையாக உள்ளதா? மத்தேயு 5:27,28
  • மனதிலே அல்லது கற்பனையிலே நடக்கும் விபசாரம் பாவம்தான். பிலிப்பியர் 4:8
  • உன் கண் எப்படி இருக்கிறது? 2பேதுரு2:14
  • கண்கள் விபச்சாரத்தால் நிறைந்து இருக்கிறதா?
  • பாவம் செய்வதை, இவர்கள் ஒருபோதும் நிறுத்துவதில்லை
  • உனது வாழ்க்கைத் துணைக்கு, உண்மையாக, நேர்மையாக, உத்தமமாக இருக்கிறாயா?

 

சோதனை மேற்கொள்ள வழி

  • மனக்கிளர்ச்சி தரும் அனைத்து செயல்பாடுகளையும் நீக்கிப்போடு
  • தேவனிடம் உனது பிரச்சினையைக் குறித்து பேசு, விடுதலைக்காக ஜெபி, தொடர்ந்து ஜெபி
  • எத்தனை முறை விழுந்தாலும், ஜெபி. ஒரு நாள் விடுதலையை அனுபவிப்பாய்
  • நீ எப்படி இருந்தாலும், உன் தேவன் உன்னை நேசிக்கிறார்
  • உனது பெலவீனங்களை புரிந்து கொள்பவர், உன்னை இருக்கிற வண்ணமாக ஏற்றுக்கொள்கிறவர்.
  • நீ எத்தனை முறை விழுந்தாலும்,  தேவன் உன்னைக் கைவிடமாட்டார்
  • ஆனால், பாவம் அதனுடைய பின்விளைவை செய்யும்படி,  தேவன் அனுமதிப்பார்
  • உடற்பயிற்சி, விளையாட்டு, இசைக்கருவி வாசிப்பது, நேரப்படி தூங்குவது, ஓய்வுநேர விருப்ப வேலைகள் எடுத்துக்கொள்ளுங்கள்
  • சோம்பல் மனம் – சாத்தானின் பணிமனை என்பதை மறந்துவிடாதே

 

கிறிஸ்துவின் உடன்படிக்கை

  • ஒழுக்க கேடான ஒரு எண்ணத்தை, ஆசையாக நினைத்து கொண்டிருப்பதில்லை – யோபு 31:1
  • இருதய பரிசுத்தத்தோடு வாழ, கண்களை பரிசுத்தமாகக் காத்துக்கொள்வேன் – மத்தேயு 6:22, உன்னதப்பாட்டு 4:9
No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.