26 Jul நண்பேண்டா!
எதுக்கெடுத்தாலும் கடவுள் கடவுள்ன்னு கடுப்பேத்தாதடா! உனக்கு நாளைக்கு ஒரு பிரச்சினைன்னா, கடவுளா வந்து நிக்க போறாரு. நண்பன், நண்பேண்டா அவன்தான் வந்து நிற்பான்.
உனக்கு ஒன்னுன்னா, உசுர கூட கொடுப்பவன்தான் நண்பன். உனக்கு காய்ச்சல்னா, உன்னை ஆஸ்பத்திரி கொண்டு போறதும் நண்பன்தான்.
உன்னை ஒருத்தன் அடிச்சா, காப்பாத்தறதும் நண்பன்தான் என்று பஞ்ச் டயலாக் பேசுவான் என்று அழகேசன் எதிர்பார்க்கவில்லை. அதற்காக ப்ரதீப் ஜெபிக்க தவறியதில்லை.
நாட்கள் உருண்டோடியது. அன்று அந்த மீளாவிட்டான் கிராமத்து மாணவர்களை அழைத்து, விடுதி வார்டன் தண்டனை கொடுத்து, மன்னிப்பு கடிதம் வாங்கினார். காரணம், இரவு பத்து மணிக்கு மேல் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டி, குதித்து, படம் பார்க்க சென்றதால்.
யாரோ ஒருவர் வார்டனிடம் போட்டு கொடுக்க, அது எதிர்பாராதவிதமாக ப்ரதீப்தான் போட்டுக் கொடுத்தான் என்று அவன் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இன்னிக்கு நாம யாருன்னு அவனுக்கு காட்டனும் என்று, கோபத்துடன் அருள் முருகனும், நம்மள பார்த்தா இழிச்ச வாயன் மாதிரி அவனுக்கு தெரிஞ்சிருக்கு. அதனால நம்ம பேரெல்லாம் நம்ம மாமா கிட்ட போட்டு கொடுத்திருக்கான் என்று கோபத்தின் உச்சியில் புலம்பிக் கொண்டிருந்தான்.
அதோ வர்றான், ஒன்னுமே தெரியாத மாதிரி வரான் பாரு. சற்றும் எதிர்பார்க்காத நிலையில் ப்ரதீப்பை எல்லாரும் அடிக்க, ஒருவனும் அவனைக் காப்பாற்ற முன் வரவில்லை.
இன்னைக்கு படம் பார்க்க போகனுமுனு நெனைச்சேன், ஆனா இங்க நிஜமாவே சண்டை நடக்குது. நல்ல வேள, மிஸ் பண்ணல என்பது விடுதி காமெடி பீஸ் பஞ்ச் டயலாக் விட்டது.
எங்கே நமக்கு அடி விழுந்து விடக்கூடாதென்று, ப்ரதீப் வகுப்பு தோழர்கள் பார்க்காதவாறு, விடுதிக்குள் சென்று, கடமையே கண்ணென்று, கடமை உணர்வோடு ,சில மாணவர்கள் தங்கள் மதிய கடமையை நிறைவேற்ற மெஸ் ஹாலுக்குள் பாய்ந்து சென்று கொண்டிருந்தனர்.
யாராவது, தனக்கு உதவ வர மாட்டார்களா? என்று எதிர்பார்ப்போடு காயங்களோடு, தரையில் விழுந்து கிடந்து, தனியாக ப்ரதீப் முனங்கிக் கொண்டிருந்தான். ஒன்றையும் அறியாத அழகேசன் விடுதியின் அருகில் வர அடிபட்டு கிடந்த ப்ரதீப்பை கண்டு, தான் வைத்திருந்த குடிதண்ணீரை குடிக்க கொடுத்தான்.
கை கொடுத்து, தோளில் தாங்கியவாறு, ஒரு ஆட்டோவை அழைத்து, மருத்துவமனை அழைத்துச் சென்று, சிகிச்சை கொடுத்து ,அருகில் அமர்ந்து கவனித்தான்.
வலியினிமித்தம் தூங்கி விழித்த ப்ரதீப் கண்களின் எதிரே பார்க்க, இயேசு கிறிஸ்துவின் படமும், அதன் கீழே “Now you are my Friends. John 15:15” நான் உங்களை சிநேகிதர் என்றேன், யோவான் 15:15 என்ற வசனத்தையும் பார்த்துவிட்டு, அழகேசனையும் பார்த்து, கண்ணீர்விட்டான்.
ஒருத்தன் கூட என்னை காப்பாத்த வரலடா! ஒருத்தன் கூட ஏன் அடிக்கிறீங்க? அப்படின்னு விசாரிக்கலடா மாப்ள!
இத்தனைக்கும் எதுக்கு அடிக்கறானுங்க கூட, என்கிட்ட சொல்லல. இத்தனைக்கும் அடிச்சவங்க எல்லாரும் என் கூட உட்கார்ந்து சாப்பிட்டவங்க, படம் பார்த்தவங்க, ஊர் சுத்தினவங்க, இப்படி பண்ணிட்டாங்க என்று கண்ணீரோடு ப்ரதீப் கலங்கினான்.
இப்ப நான் உணருகிறேன். இயேசு சாமிதான் உண்மையான நண்பன் என்று. அன்றொரு நாள் நீ சொன்னப்ப நான் சிரிச்சேன். என் ப்ரண்ட்ஸ்தான் எனக்கு எல்லாமேன்னு நினைச்சேன். அது தப்புன்னு புரிஞ்சிகிட்டேன். மனிதர் அன்பு மாயையானது என்றான்.
கவலைப்படாதே ப்ரதீப். இயேசப்பா ஒருத்தர் தான் உண்மையான நண்பர், நம்மை புரிந்து கொண்டவர், நம்மோடிருப்பவர், எல்லா சூழலிலும் நம்மை கைவிடாதவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்காக, கல்வாரி சிலுவையிலே, இரத்தம் சிந்தி உயிரை தந்தவர். உயிரை தந்ததோடு, உனக்காக, எனக்காக, பிதாவிடம் பரிந்து பேசுகிறவர்.
ஏதோ எதிர்பார்ப்போடுதான் எல்லா மனிதர்களிடம் நட்பும் இருக்கும். ஆனால் எவ்வித எதிர்பார்ப்பின்றி உன் உள்ளத்தை மட்டுமே எதிர்பார்த்து உன்னை நேசிக்கும் ஒரே நண்பர் இயேசுகிறிஸ்து.
ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை யோவான் 15:13
அப்படி நண்பனுக்காக உயிரையே தந்த நண்பர் இயேசு கிறிஸ்து மாத்திரமே என்று இருவரும் புதிய தெளிவோடு விடுதிக்குள் கடந்து சென்றனர்.
No Comments