பாவம் செய்த ஆதாம் ஏன் உடனே சாகவில்லை?

  • ஆதியாகமம் 2:17 – தேவன் ஆதாமிடம் “சாகவே சாவாய்”என்றார்
  • ஆதியாகமம் 3:4 – சாத்தான் ஏவாளிடம் “சாகவே சாவதில்லை” என்றான்
  • ஆதாம் 930 வருடம் ,சரீரத்தில் உயிரோடிருந்தான்
  • ஆதியாகமம் 5:5 -எதில் மரித்தான்?

 

ஆதாமின் வீழ்ச்சியில்

  • மரணம் என்பது மனிதனுக்கும், தேவனுக்கும், இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படுதல்
  • தேவனோடு உள்ள தொடர்பில் உயிரற்றவராயிருந்தார்கள்

 

மரணத்தின் 5 பரிமாணங்கள்

  • தேவனிடமிருந்து அந்நியராக்கப்படுதல் அல்லது பிரிக்கப்படுதல்
  • பிறரிடமிருந்து அந்நியராக்கப்படுதல்
  • சுற்றுப்புறச் சூழலிலிருந்து அந்நியராக்கப்படுதல்
  • சாத்தான், மரணத்திற்கு அதிகாரியானான்
    (சாத்தான் பாவம், மரணம் என்னும் பிரமாணத்தை வைத்தான். எபிரெயர் 2:14,15)
    இயேசுகிறிஸ்து மத்தேயு 8:22, லூக்கா 9:60, மரித்தவர்கள் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்
  • சரீரத்தில் உயிரோடு இருக்கிறவர்களை, இயேசு மரித்தவர்கள் என்கிறார். ஏனெனில் தேவனோடு உள்ள தொடர்பில், உயிரற்றவர்களாயிருந்தார்கள்.
    இந்த மரணத்திற்கு காரணம் – அக்கிரமக்காரர், பாவங்கள். எபேசியர் 2:1,5,
    கொலோசெயர் 2:13

இயேசுகிறிஸ்து, சிலுவையில் தொங்கினபோது, மத்தேயு 27:45,46 இல் ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும், பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 2கொரிந்தியர் 5:21 இயேசுவின் மீது, உலகத்தின் பாவங்கள் எல்லாம் சுமத்தப்பட்டபோது, தேவனுடைய கோபாக்கினை, அவர்மேல் வந்தபோது, மரணத்தின் முதல் பரிபூரணமாகிய பிதாவிடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டார்.

என் தேவனே! என்தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்றார். இயேசுவுக்கும் பிதாவுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டது. லூக்கா 23:34 முதல் வார்த்தை – பிதாவே இவர்களுக்கு மன்னியும்.  லூக்கா 23:46 கடைசி வார்த்தை – பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.

இயேசுகிறிஸ்து தமது மரணத்தில்

  • முதலாவது, நமது அந்நியப்படுத்துதல் நடைபெற்றது.
  • இரண்டாவது, எபிரெயர் 9:22 இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம், பாவத்திற்கான தண்டனை செலுத்தித் தீர்க்கப்பட்டது.
  • இரத்தம் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
No Comments

Post A Comment
This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

The reCAPTCHA verification period has expired. Please reload the page.