25 Jul பப்ஜி விளையாடறது மனநோயா?
அட ஆமாங்க. மே 25, 2019 உலக சுகாதார மையம், இந்த கேமிங் டிஸ்ஆர்டரை ஒரு மனநோயா ஏத்துகிட்டு இருக்காங்க.
ஏங்க, சாதாரணமா கேம் விளையாடறதப் போயி இப்படி நோய்ன்னு சொல்றீங்களே? அப்படின்னு நீங்க யோசிக்கலாம். இப்படி தான் பல பேர் தங்களுக்கே தெரியாம இந்த கேமிற்கு அடிமைகளாகி மனநோயால் பாதிக்கப்படறாங்க.
கேமிற்கு அடிமைகள் அப்டின்னு சொல்றது முதல கொஞ்சம் ஓவரா இருந்தாலும் நல்லா யோசிச்சு பாத்தா இன்னைக்கு செல்போன்ல கேம் அடிக்ட் ஆகாதவர்களே இல்லன்னு சொல்லலாம்.
வாலிபர்கள் பப்ஜி ஆடுறாங்கன்னா, பெரியவங்க கேன்டி கிரஷ் ஆடுறாங்க. கேம் விளையாடறது தப்பு இல்ல, ஆனா எவ்வளவு விளையாடறோம், எதுக்காக விளையாடறோம், இதுனால நமக்கு என்ன ஆகுதுன்னு கண்டிப்பா யோசிக்கனும்.
முதல்ல, இந்த கேம்ஸ்க்கு எப்படி அடிமை ஆகறோம்னா, ஜெய்க்கிறதுனால. நம்ம ஜெயிக்கும்போது நம்ம மூளைல இருந்து டோப்பமைன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் என்ற இரண்டு கெமிக்கல்ஸ் ரிலீஸ் ஆகுது. அதுவும் ப்ரண்ட்ஸ் கூட சேர்ந்து டீமா முகம் தெரியாதவங்கள ஜெயிக்கும்போது இன்னும் அதிகமா ரிலீஸ் ஆகும்ன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
இதனாலதான் பப்ஜி ஆடும்போது முதல்ல செம ஈஸியா இருக்கும். ஏன்னா கேம் டிசைன் அப்படி. நம்ம ஆப்போனன்ட்ஸ் எல்லாம் பாட்ஸூம் விளையாட தெரியாதவர்களாக இருப்பார்கள். நம்ம ஜெயிச்ச உடனே, அந்த ஃபீலிங் மறுபடியும் வேணும்ன்னு தோணும்.
போகப் போக லெவல் கஷ்டம் ஆகி நாம தோற்கும்போதும், நம்ம ப்ரெயின் ஒத்துக்காது. இல்ல நீ நல்லா ஆடுவ, ஏற்கனவே ஜெயிச்சுருக்கே என்ற உணர்வுகள் எல்லாம் தொடர்ந்து நம்மை விளையாடத்தூண்டும்.
இப்படி தொடர்ந்து விளையாடுறதுனால, நம்ம ப்ரெயின ஒரு கட்டத்துல நம்மளால கன்ட்ரோல் பண்ண முடியாமப் போயி அடிக்ட் ஆகிடறோம். சில சமயங்கள்ல இந்த ஜெயிக்கிற ஃபீலிங் நம்மல நாலா திசையில தள்ள கொஞ்சம் வாய்ப்பு இருக்கு. ஏன்?, நம்மள அடிமையாக்குறதுக்கும், மனநோயாளியா மாத்துறதுக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்ப அதிகம்.
தூங்கும்போது கனவுல கூட பப்ஜி கனவா வரும். ரொம்ப கோவம் வரும், வன்முறையை ரசிப்போம். நிகழ்காலத்துக்கும் அந்த விளையாட்டு உலகத்துக்கும் வேறுபாடு தெரியாது, இது இப்படியே தொடர்ந்து நம்ம குணநலன்களையே மாத்திடும்.
இதுல இருந்து விடுபட நினைக்கிறவங்க சில சமயங்கள்ல தவறான வழிகளை தேடி போறாங்க. உதாரணமா ஆபாச படங்கள் பார்ப்பது, குடிப்பழக்கம்ன்னு சொல்லிகிட்டே போகலாம். சரி, நீங்க சொல்றது நியாமாதான் இருக்கு. இதுல இருந்து வெளியே வர என்ன பண்ணனும்னு கேட்கிறீங்களா?
நீங்க இந்த ஆர்டிக்கிள இவ்வளவு நேரம் படிச்சதே நல்ல முயற்சி. இந்தப் பிரச்னையை தற்போதைய உலகம் ஒரு மருத்துவ கண்டிஷனா தான்அணுகும். அப்படி அணுகும்போது அது மனமாற்றத்தையோ, மனம் திரும்புதலையோ தராது. நீங்க தனியா தான் போராடனும்.
ஆனா பைபிள்ல இயேசு சாமி சொல்றாரு. என் மேல உன் பாரத்தை வெச்சிடு; நான் உனக்கு விடுதலையை தரேன்னு சொல்றாரு. இன்னிக்கு நீங்க அவரை நம்பி, அவர் கிட்ட, கடவுளே இதுல இருந்து எனக்கு விடுதலை தாங்கன்னு கேட்டீங்கன்னா அவர் கண்டிப்பா உங்களுக்கு விடுதலை தருவது மட்டுமில்லாம, உங்க வாழ்க்கையையே மாற்றுவார்.
உங்க கூட துணை நின்று நீங்க மீண்டு வர உதவி செய்வார். நீங்க செய்ய வேண்டியது, அவரை நம்பினால் போதும்.
Dr.T.D.Mathuranayakam
Posted at 10:06h, 17 AugustWe will become addict to it.