26 Jul செக்ஸூவல் பாவம்தான் மோசமானதா?
நமது சபைகளில், போதைக்கு அடிமையாக, வங்கி கொள்ளையர்களாக, கொலைகாரராக இருந்து விசுவாசிகளானவர்களுக்கு, பிரசங்க பீடம் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பாலுறவு பாவம் செய்தவர்களுக்கு, நாம் இடம் கொடுப்பதே இல்லை.
அமெரிக்காவில், பாலுறவு பாவத்தில், சிக்கி சிறையிலிருந்த போதகர் ஒருவரை, பில்லி கிரகாம் பார்க்கச் சென்று அவரைத் தழுவி,
“ கிறிஸ்துவின் சரீரத்தில், ஒரு உறுப்பிற்கு பிரச்சினை என்றால், சரீரம் முழுவதும், அதை உணரும். கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொள்வார். நானும் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்றார்.”
பாலுறுவு பாவம்
- மன்னிப்பது மிகவும் கடினம்.
- நமது ஆள்தன்மையுடன் தொடர்புடையது.
- தேவன், நாம், மற்றவர்கள் தொடர்புள்ளவர்களாக இருப்பதால், தீவிரமானவைகளாகும்.
- மக்களை, பயன்படுத்தும் பொருட்களாக, அவமதிக்கின்றது.
- கடவுளுக்கும், மக்களுக்கும் எதிரான பாவம்.
மரணத்திற்கு பாத்திரர் அல்லது தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை
- வேசித்தனம்
- விபச்சாரம்
- காமவிகாரம்
- ஓரினச் சேர்க்கை லேவியராகமம் 13,18:29
- துரோகம்
- கொலை
- பொய்யர்
- பொறாமை
- புறங்கூறுதல்
- பெருமை
- தற்புகழ்ச்சி
ரோமர் 1:28-32
கலாத்தியர் 5:19-21
வெளி 21:8
- புறங்கூறுதல்,பொறாமை,பெருமை – இவை யாவும் மரணத்திற்கு பாத்திரமான பாவம்
- ஓரினச் சேர்க்கை, வேசித்தனம்,கொலை – மரணத்திற்கு பாத்திரமான பாவம்
- தேவனுடைய கண்ணோட்டத்தில் பாவம் பாவமே
மனிதனுடைய கண்ணோட்டத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என வேறுபடுத்துகிறோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், எந்த பாவத்தையும், கழுவி, சுத்திகரிக்கும். நாம் அனைவரும் பாவிகள்தாம். நாம் கடவுளின் தரத்தை, எட்டாதவர்கள். தேவனது நியாயத்தீர்ப்புக்குப் பாத்திரமானவர்கள் – ரோமர் 3:23.
நம்மை கிருபையினாலே, மீட்கப்பட்ட பாவியாக பார்க்காவிட்டால், மற்றவர்களை மன்னிப்பது, நமக்கு மிகவும் கடினமாக இருக்கும். எந்த பாவத்திலுமிருந்து, மனந்திரும்பிய யாராக இருந்தாலும், அவர்களுக்காக, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அவர்களை, நமது ஐக்கியத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பு:
- பாலுறவை, தவறான வழியில் பயன்படுத்தினால் விளையும் விளைவுகள்
(1கொரிந்தியர் 6:18- சுய சரீரத்திற்கு விரோதமான பாவம்) - உடல் சார்ந்த பிரச்சினைகள்(எயிட்ஸ்)
- சமுதாய பிரச்சினைகள் (தேவையற்ற கர்ப்பம்)
- குற்ற உணர்ச்சி
- பழக்கங்களுக்கு அடிமையாகுதல் – மனநிலை சார்ந்த பிரச்சினைகள்
- ஆவிக்குரிய வளர்ச்சி பாதிக்கும் – ஆவிக்குரிய பிரச்சினைகள்
- உறவுகள் சார்ந்த பிரச்சினைகள்
No Comments