23 Oct சர்ஃப் எக்ஸல்!
சோர்வோடு அந்த நாளைத் தொடங்கினான் அஜய். கடிகார முள் காலை மணி ஒன்பது என்றது. அம்மா, அப்பா இருவரும் அவரவர் அலுவலகங்களுக்கு வண்டிகளில் பறந்து விட்டனர். இவன் மட்டும் வெட்டி ஆபீசராக வீட்டைக் காவல் காக்கிறான்.
புறப்படும்போது ஆறாவது முறையாக அம்மா ஞாபகப்படுத்தினார்கள். அஜய் Hotcase-ல் சப்பாத்தி, குருமா வைத்திருக்கிறேன். ஃளாஸ்க்கில் காபி இருக்கிறது. சீக்கிரம் சாப்பிட்டு விடு சாப்பாடா…? பசியைத் தொலைத்தவனுக்கு சாப்பாடு ஞாபகம் வருமா?
ஆயிற்று, கல்லூரி வாழ்வுக்கு Bye Bye, சொல்லிப்பத்து மாதமும் ஓடிவிட்டது. போதாக்குறைக்கு தொலைதூரக் கல்வியில் MBA-யும் சேர்ந்துவிட்டான். வேலை மட்டும் எட்டாக் கனியாய்த் தொங்கியது.
walk in interview, On-Campus, Off-Campus, Job Jair என்று எல்லா வித வேலை மேளாக்களிலும் ரெசியுமோடு (Resume) அலைந்ததுதான் மிச்சம். அப்பா, இதுக்கு ஏண்டா பெரிசா கவலைப்படுற, ஏதாவது எம். ஃபில், பி. ஹெச்டின்னு கண்டின்யூபண்ணு என்றார்.
அம்மா மட்டும், அஜய், இயேசப்பா உனக்குன்னு உருவாக்கி வச்சுருக்கற வேல எதுங்கறத ஃபாஸ்ட் பண்ணி, ஜெபிச்சுக் கண்டுபிடி, சும்மா காத்துல சிலம்பம் பண்ணாத என்றார்கள். மொபைல் In His Time பாடியது.
மறுமுனையில் ஜேம்ஸ், டேய் அஜய் சகரியா வில்சன் (இப்படி முழுப் பேரையும் நீட்டி முழங்காதடா என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் எந்தக் கூட் டத்திலும் மானத்தை வாங்கி விடுவான்) டேய், சிடிஎஸ்-சுல ஒரு வாக் இன் இ ன்டர்வியூ போவோமா?
நம்பிக்கையில்லடா, ஜாப்ஃபேர்ல அவங்ககிட்ட குடுத்த நம்ப ரெசியும் குப்பைத் தொட்டிக்குத்தான் போயிருக்கும் அஜய் அவநம்பிக்கையை எதிரொலித்தான்.
மாமு, கல்ல வீசிப் பாப்போம். செலக்ட் பண்ணினா சிடிஎஸ்சுக்கு லாபம், இல்லயா வேற ஏதோ ஒரு அதிர்ஷ்டசாலிக் கம்பெனி நம்ம வருகைக்கு காத்திருக்குதுன்னு அர்த்தம் யம்மாடியோவ் – ஜேம்ஸின் பாசிட்டிவ் ஸ்பிரிட் அஜய்யை நிமிர்த்தி விட்டது.
மனது ரொம்ப டல்லாயிடுச்சுடுடா அஜய் இழுத்தான்.
ஒன் டல்லான மனசை, ஜில்லாக்க கைவசம் ஒரு டானிக் வச்சிருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல அங்க வர்ரேன்
சொன்ன மாதிரியே வந்து விட்டான் ஜேம்ஸ்.
அஜய் சகரியா வில்சன், ப்ளிப்கார்ட்ல என்னடா தேடுற?
ஒரு யூனிக் கிப்ட்… அஜய் முடிக்குமுன், டே படுவா எனக்குத் தெரியாம எந்த ப்ரெண்டு சிக்குனாடா?
ஜேம்சின் ஆர்வம் எரிச்சலூட்டியது அஜய்க்கு.
அசிங்கமா பேசாதடா, அப்பா, அம்மா வெட்டிங்டேக்கு கிப்ட் தேடுறேன்,
அப்புறமா தேடு நண்பா, முதல்ல புடி இந்த CDயை. அற்புதமான மூவி ஒண்ணு டவுன்லோட் பண்ணினேன். போட்டுப்பாரு, உன் சோர்வெல்லாம் பறந்து போயிடும்
வச்சுட்டுப்போடா, சாயங்காலம், பேமிலியா நாங்க பாக்கறோம்
டேய்… மடையா, பதறி விட்டான் ஜேம்ஸ்… ஐயோ நீ பச்சக் கொழந்தங்கறத நா மறந்துவிட்டேனே, இதெல்லாம் யூத் ஒன்லி மூவிடா… இது… இது…
ஜேம்ஸை பேச விடவில்லை. அஜய், பட்டென சிடியை நாலு துண்டாக உடைத்து குப்பைக் கூடைக்குள் வீசினான். அசுத்தமானத ஓயாமப் பாத்து மனசை சாக்கடையா வச்சிருக்கறது போதாதுன்னு, அடுத்தவன் லைஃபையும் ஸ்பாயில் பண்ண நெனக்கிறியேடா? எப்படிடா உன்னால கோயில் கொயர்ல ஒக்காந்து தூய, தூய, தூயா ன்னு பாட முடியுது? அஜய் ஆசிட்டாய் எரிந்தான்.
தெளிந்து விட்டான் ஜேம்ஸ். ஸாரிடா… என்றவன் மறுபேச்சு இல்லாமல் வண்டியில் பறந்து விட்டான்.
மூன்று நாளைக்குப் பின் ஜேம்ஸிடமிருந்து கால் வந்தது.
அஜய் சகரியா வில்சன்… கோபப்படாம நா சொல்றத கேளுடா. மூணு நாளா தூக்கமே வர்லடா. தப்புன்னு தெரிஞ்சதும் நீ அன்னைக்கு எதுத்து நின்ன மாதிரி நிக்க முடியாம நான் வளைஞ்சு போனதால விடுபட முடியாத பிரச்னைல நான் மாட்டிக் கிட்டேண்டா.
வெக்கத்த வுட்டு சொல்றேன்… போர்னோகிராபி சைட்டுக்குள்ள நொளையாம என்னால ஒரு நாள் முடிக்க முடியல. தப்புன்னு தெரிஞ்சும் திரும்பத் திரும்ப அதயே செய்யறேன். கண்ணும், மனசும் நெரந்தரமா கெட்டுப்போச்சுடா… மௌனமாய் மனதுக்குள் ஜெபித்தான் அஜய்.
ஜேம்ஸ், பேர்க் கிறிஸ்தவனா ஆலய அட்டன்டன்ஸ் ரெகுலரா போட்டு, சர்ச் ஆக்டிவிட்டியில கலந்துக்கிறதுல மட்டும் பிரயோஜனம் இல்லடா. மனது மறுரூபமாக ணும்டா. கடவுளோட வார்த்தைகள் மட்டும்தாண்டா நம்மைப் பாதுகாக்கிற கிருமி நாசினி டெட்டால், நம்மை சுத்தம் செய்யிற சர்ஃப் எக்ஸல்-டா… சொன்னா புரிஞ்சுக்கும்னு நெனக்கிறேன்.
இப்படி பரிசுத்தமான வாழ்வு மந்திரத்தில் மாங்காய் இல்லடா – அது நம்ம படைச்சவரோடு தெனமும் நடக்கறதுக்கு நாம எடுக்கும் தீர்மானத்தின் தொடர் ஓட்டம்டா. ஸாரிடா, போரடிக்கற மாதிரியிருந்தா மன்னிச்சிக்க… நாளைக்கு மதியம் Lunch-க்கு வாயேண்டா, சாப்பாட்டுக்கு மேல நாம நெறய பேசுவோம் வரும்போது ரூபனையும் கூட்டிட்டு வரலாமாடா? அவனும் நானும் ஸேம் போ ஜேம்ஸின் ஆதங்கம் புரிந்தது.
ஷ்யூர், ஃபிரைடு ரைஸ், சிக்கன் கிரேவி என்னோட ஸ்பான்ஸர், we will have a time of Fellowship அஜயின் உள்ளம் மகிழ்வால் நிறைந்தது. லைஃப் அப்ளிகேஷன் பைபிளோடு அமர்ந்தான், எல்லா யுகங்களுக்கும், தலைமுறைகளுக்கும் கர்த்தரானவரிடம் கற்றுக்கொள்ளும்படி!
நன்றி : தரிசனச்சுடர்
No Comments