17 Jun வழக்கு எண் லூக்கா 24/6,7
என்ன சார், இந்த கேஸ் நம்புற மாதிரியா இருக்கு? வெள்ளிக்கிழமை ஆயிரம் பேர் முன்னால் கொடூரமான முறையில சிலுவையில அடிச்சு மரண தண்டனை கொடுத்திருக்காங்க! அப்புறம் செத்ததும் அவருக்குத் தெரிஞ்சவங்க இரண்டு மூணு பேர்பாடிய இறக்கி ஜோசப் கல்லறையிலதான் வெச்சி அடக்கம் பண்ணியிருக்காங்க. ஞாயித்துக்கிழமை போயி பாத்தா வெச்ச இடத்துல பாடியக் காணோம். அவரு சொன்ன மாதிரி உயிரோட எழும்பிட்டாருன்னு சொல்றாங்க. நம்புற மாதிரியா இருக்கு?
கிறிஸ்தவராகிய நாம் இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்க அச்சாணி அல்லது கடையாணி (linchpin) போன்றதொரு காரணம் உண்டென்றால் அது “கிறிஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார்” என்பதே. இன்றைய காலகட்ட த்தில் யார் வேண்டுமானாலும் தங்களை சாமி என்றோ. தெய்வத்தின் அவதாரம் என்றோ தங்களைக் குறித்து உரிமை கோரிக் கொள்ளலாம். ஆனால் தாங்கள் செத்ததையும் அதன் பின்னர் உயிரோடு வந்ததையும் தக்க சாட்சியங்களோடு நீரூபித்து விட்டால் இதுபோன்றதொரு நிகழ்வை மறுப்பது இயலாததாகிவிடும்.
இயேசுவின் மரணச் செய்தி மோசடியா? அவரது உயிர்த்தெழுதல் ஒரு கட்டுக்கதையா?
கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் கதையல்ல நிஜம் என்பற்கு நடந்த சம்பவங்கள் மூலம் விளக்கம் கூற இயலுமா? இயேசு சிலுவையில் மரிக்கவேயில்லை என்றும், அவர் தப்பித்து இந்தியாவிற்கு வந்தாரென்றும் அவரது சமாதி காஷ்மீரில் ஸ்ரீநகர் பகுதியில்தான் உள்ளது எனவும் அஹமதியா முஸ்லிம்கள் இன்றைக்கும் நம்புகின்றனர். கார்ல் பார்ட் கார்ல் வெஞ்சுரினி போன்றோர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில், இயேசு தான் சிலுவையில் குடித்த காடியினால் மயங்கிச் சரிந்து செத்தது போலானார் என்றும், பின்னர் அவரை குகையில் வைத்ததும் குளிர்ந்த காற்று பட்டு மயக்கத்திலிருந்து தெளிந்தார் என்றும் விளக்கம் கொடுத்தனர். இதற்குச் சான்றாக மாற்கு 15:36, 44 போன்ற வசனங்களை மேற்கோள் காட்டி இயேசுவின் உயிர்த்தெழுதலை நம்பமறுத்தனர்.
20ஆம் நூற்றாண்டில் இதற்கொப்பான அனைத்து விளக்கங்களும் ஸ்வூன் அறனுமானங்கள் (Swoon hypothesis) என்ற பெயரில் 9க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களால் பரப்பப்பட்டன. இதற்கும் மேலாக 1982இல் Holy Blood, Holy Grail என்னும் புத்தகத்தில் “இயேசு சிலுவையில் மரிக்கும் முன்பே பிலாத்துவிற்கு லஞ்சம் கொடுத்து அவரைச் சார்ந்தவர்கள் அவரை சிலுவையிலிருந்து இறக்கிவிட்டனர்” என்றும் குறிப்பிட்டனர். ஆனாலும் இந்த அனைத்து அறிஞர்களும், எழுத்தாளர்களும் இறுதியில் ஒத்துக் கொண்ட ஒரு விஷஷயம் என்ன தெரியுமா? “இந்த முடிவுகளைத் துல்லியமாக இன்றுவரை எங்களால் நீரூபிக்கவே முடியவில்லை” என்பதே. அல்லேலூயா! கிறிஸ்து மரித்தார்; அவர் உயிரோடு எழுந்தார் என்னும் உண்மையை எப்படி மறுக்கவோ, மறைக்கவோ முடியும்?
1. மருத்துவ ஆதாரங்கள்
டாக்டர் ராபர்ட் ஜே. ஸ்டீன் என்னும் உலகப் புகழ்பெற்ற தடயவியல் நோயியல் நிபுணரைப் பொறுத்தவரையில், “செத்த ஒரு உடலானது பல கதைகளைச் சொல்ல முடியும்” என்கிறார். ஆயிரக்கணக்கான பிரேத பரிசோதனைகளை மேற்கொண் ட டாக்டர் ஸ்டீன் இப்பேர்ப்பட்ட பரிசோதனைகள் நமக்குப் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும் என்பதை ஆ ணித்தர மாகக் கூறுகிறார். ஆம்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ரோமச் சிலுவையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் வழக்கில் LDIT கூட. மருத்துவ ஆதாரம் அம் மரணம் மோசடியா? அல்லது உண்மையா? என்பதை நிருபிக்க முடியும்.
இயேசு சிலுவையில் அடிக்கப் படும் முன்னரே. அவர் சித்திர வதைக்குள்ளாக ஆளானார் என்றால் அது மிகையாகாது.வியாழன் இரவிலிருந்தே நடக்கப்போகும் சம்பவங்களை நன்கு அறிந்திருந்ததால், மனதளவில் அவர் பெரும் அழுத்தத் திற்குள்ளாகி யிருந்தார். அதிகப்படியான மனஅழுத்தம் உடலில் ரசாயனங்களைத் தூண்டிவிட்டு வியர்வைச் சுரப்பிகளில் உள்ள ரத்த நாளங்களை வெடிக்கச் செய்து துளிகளாக வெளியே வரும் இந்நிலைக்கு ஹேமாட்ரோசிஸ் (Hematrosis) என்று பெயர். கெத்சமெனே தோட்டத்தில் அவரது வியர்வைத் துளிகள் ரத்தமாக விழுந்ததை இங்கே நாம் நினைவுகூற வேண்டும்.
இந்நிலையில் இயேசுவின் உடல் முழுதும் தோல்பகுதி மிருதுவாக மாறியிருக்கும் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு, கைது செய்யப் பட்ட பின். இந்த மென்மையான உடலைத்தான் எலும்புத் துண்டும் இரும்புக்குண்டுகளும் பொருத்தப்பட்ட சவுக்கால் அடுத்த நாள் ரோமப் போர்ச்சேவகர் அடித்தனர். இதனால் சதை பிய்த்து எடுக்கப்பட்டு ஆழமான வெட்டுகளால் எலும்புகளும் ரத்த நாளங்களும் தெரியுமள வுக்கு நிலம் உழுத து போல மாறியிருக்கும். இதனால் ஹைபோவோலமிக் அதிர்ச்சி (Hypovolamic Shock) ஏற்பட்டு இதயம் அதிகப்படியாகத் துடித்திருக்கும். இரத்த அழுத்தம் குறையக் குறைய சிறுநீரகச் செயல்பாடு குறைந்து மயக்கம் ஏற்பட்டிருக்கும்: அதிகப்படியான நீரிழப்பினால் தாகம் எடுத் திருக்கும். சுவிசேஷங்களில் இதற்கான சான்றுகள் தெளிவாக எழுதப்ப ட்டுள்ளன. எனவே சிலுவையில் அடிக்கப்படும் முன்னரே நமதாண்டவர் தீவிர வலியிலும் மோசமான நிலைமையிலும்தான் இருந்தார்.
பின்னர் இயேசு கொல்கொதாவிற்கு வரும் போது. சிலுவையில் 5 முதல் 7 இன்ச் அளவுள்ள கூரான ஆணிகளால் உ ள்ளங்கைகளில் அல்ல. மணிக்கட்டில்தான் அறைந்தனர். உள்ளங்கைகளில் அறைந்திருந்தால். உடல் பாரத்தால் கைகள் பிய்த்துக்கொண்டு வந்துவிடும். இப்படி கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டவராய் இயேசு சிலுவையில் தொங்கும்போது. இருந்த வேதனைதான்மனிதனின் உச்சகட்ட வேதனை (Excruciating Pain) என்கிறார்கள். இப்படித் தொங்கும்போது முதலாவது தோள்களில் மூட்டு விலகியிருக்கும்.சங்கீதம் 22இல் சொன்னவிதமாய் அவருக்கு நடந்தது. பின்னர் மூச்சுவிட மிகுந்த வேதனைப் பட்டிருக்க வேண்டும். ரெஸ் பிரேட்டரி அசிடோசிஸ் (Respiratory Acidosis) அதாவது இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு கார்பானிக் அமிலமாக மாறி இரத்தத்தின் அமிலத்தன்மையை அதிகரித்திருக்கும். இதனால் இதயத் துடிப்பில் மாறுபாடு ஏற்பட்டு இறுதியில் கார்டியாக் அரெஸ்ட் (Cardioc Arrest) என்று சொல்லப்படும் இதயத் துடிப்பு நின்ற நிலையில் உயிர் போயிருக்க வேண்டும்.
இந்நிலையில் பெரிகார்டியல் (Pericardial) மற்றும் பிளியூரல் எபியூசன் (Pleural Effusion) என்னும் நிலைகளால் இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளிலும் நுரையீரலைச் சுற்றியும் திரவ ம் சேரும். ரோமப் போர்ச்சேவகன் ஈட்டியால் விலாவில் குத்தியபோது அவர் இறந்த நிலையில் இரத்தமும் தண்ணீரும் வெ ளியேறியதை யோவான் தனது சுவிசேஷத்தில் குறிப்பிடுகிறார்.
எனக்கு அன்பான வாசகரே. நமதாண்டவர் இயேசு கிறிஸ்து சிலுவையில் இறந்தது வரலாற்றின் அடிப்படையில், மருத்துவ ரீதியில் சந்தேகத்திற்கிடமின்றி உண்மை என்பது நிரூபணமாகிறது. இப்பேர்ப்பட்ட கொடூர மரணத்தை அவர் விரும்பியேற்கக் காரணம் ஒன்றே ஒன்றுதான். அது ‘அன்பு’ மட்டுமே!
2. கல்லறையும் காணாமற்போன சரீரமும். காலியான கல்லறையும்.
கொலை வழக்குகளில் கொலை செய்யப்பட்ட உடல் காணாமற் போனால், அவற்றைத் தீர்ப்பதில் பெரும் சிக்கல் வந்து விடும். அப்படித் தீர்க்க முடியாத வழக்குகளை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், கல்லறைகளில் வைத்த உடல் காணாமற் போவது அரிதான ஒன்றுதான். இயேசுவின் வழக்கில் அவர் இறந்ததைக் கண்டவர்கள் அவர் மீண்டும் உயிரோடிருப்ப தைக் கண்டார்கள். இங்கே காணாமற்போன அவரது உடல் ஒரு பிரச்சனையல்ல. அவர் உயிரோடிருப்பதுதான் பிரச்சனை. ஆனால் பவுல் அப்போஸ்தலன் இவ்வுண்மையை மிக அழகாக 1 கொரிந்தியர் 15:17இல் சொல்வது போல இக்காலியான கல்லறை இயேசு தேவ குமாரன் என்பதற்கு மிக வலுவான சாட்சியாகிறது. ரோம அரசாங்கத்தின் சட்டப்படி, சிலுவையிலறையப்பட்ட குற்றவாளிகளைப் பறவைகள் தின்னவோ அல்லது பொதுவான பிரேதக்குழிகளிலோ எறிந்து விடுவார்கள். ஆனால் இயேசுவின் சரீரமோ, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்புவின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு மிகக் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.
கிறிஸ்து மரித்ததையும் அவர் உயிரோடு எழும்பியதையும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே ஆதித் திருச்சபைப் பெரியோர் மற்றும் விசுவாசிகள் அறிக்கை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து. பவுல் அப்போஸ்தலன் எழுதிய வரலாற்றுப்பூர்வமான கடிதமாகிய கொரிந்தியருக்கு எழுதிய நீருபம், கி.பி. 37இல் எழுதப்பட்ட மிகவும் நம்பத்தகுந்த சான்றாகிறது. இயேசுவின் காலியான கல்லறையும் அவரது உயிர்த்தெழுதலும் யூதருக்கு மட்டுமின்றி, சகல கிறிஸ்தவருக்கும் தெரிந்த ஒரு சான்று. கிறிஸ்து அவமானத்தின் சின்ன மாகிய சிலுவையில் கொடூரமான முறையில் மரித்து அடக்கம் பண்ணப்பட்ட அதே ஊரிலேயே அவர் உயிரோடு எழாவிட்டால், யூத சமுதாயம் அவரை நம்பியிருக்காது. கிறிஸ்தவமும் ஒரு மாபெரும் இயக்கமாக மாறியிருக்காது.
ஒருவேளை இயேசுவின் சரீரமோ அல்லது உடலின் பாகங்களோ கிடைத்திருந்தால் உடனே அதை அரசாங்கத்தில் ஒப்படைத்து உயிர்த்தெழுதல் பொய் என நிரூபித்திருப்பர். அது மாத்திரமல்ல பெண்களின் சாட்சியை நம்பாத அக்காலத்து சமுதாயத்தில் பெண்களே அவரது உயிர்த்தெழுதலுக்கு முதல் சாட்சிகளாயினர். இது வரலாற்றின் நம்பகத்தன்மைக்கு மாபெரும் அத்தாட்சி. சீடர்கள் உண்மைக்குப் புறம்பான எந்தவொரு காரியத்தையும் எழுதவில்லை. மற்ற கட்டுக்கதைகளான, இயேசுவை சீடர்கள் தூக்கிச்சென்றுவிட்டனர்: பெண்கள் அதிகாலையில் தவறான கல்லறைக்குச் சென்று பார்த்தனர்: ரோமப் போர்ச்சேவகர்கள் தூங்கிவிட்டனர் இவையனைத்தும் ஒரே அனுமானத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டவை. அது என்ன? “இயேசு அங்கே இல்லை! அவர் உயிர்த்தெழுந்தார். அவரது கல்லறை காலியாகத்தான் உள்ளது”.
3.கண்ணாரக் கண்ட சாட்சிகள்
உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இயேசு பலருக்குக் காட்சியளித்ததை பவுல் அப்போஸ்தலன் 1 கொரிந்தியர் 15: 58 வசனங்களில் குறிப்பிடுகிறார். பேதுரு. பன்னிரு அப்போஸ்தலர்கள். 500க்கும் மேற்பட்ட மக்கள். யாக்கோபு மற்றும் அப்போஸ்தலர் அனைவருக்கும் காட்சியளித்தார். இறுதியாக பவுலுக்கும்அவர் காட்சியளித்ததை எழுதுகிறார். இவர்களனைவரும் இயேசுவைக் கண்களால் கண்டவர்கள். இவர்கள் ஏதோ பயத்தினாலோ அல்லது மிரட்சியினாலோ பிரமை பிடித்ததினால் அக்காட்சியைக் காணவில்லை. மாறாக பூட்டிய வீட்டினில், வீதியில், மலையோரத்தில் இயேசுவை உயிரோடு எழுந்தவராகக் கண்டனர். இப்பேர்ப்பட்ட சாட்சிகள் நமக்கு இயேசுவி ன் உயிர்த்தெழுதல், கதையல்ல நிஜம் என்பதை உணர்த்துகிறது.
எனக்கு அன்பான வர்களே! நமது குடும்பத்திலும் நமக்கு அன்பானவர்களை நாம் இழக்கக்கொடுத்திருக்கலாம். அந் த இழப்புகளின் மத்தியில் உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தோஷப்பட முடியுமா என்பது சற்று கடினமான சிந்தனைதான். ஆனால் நமது இழப்புகளுக்கும் பாடுகளுக்கும் இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒன்றுதான் தீர்வு. கிறிஸ்துவை உயிரோடு எழுப்பின தேவன் ஒரு நாளில் நாம் இழந்து தவிக்கிறவர்களையும் எழுப்புவார். உயிர்த்தெழுதல் உண்டென்றால். பரலோகம் உண்டு. நாம் ஒரு நாளில் அங்கே இருப்போம். இயேசுவையும் காண்போம். அல்லேலூயா!
ஆதாரம் : The Case for Christ by Lee Strobel, 1998 Zondervan Publishing House.
நன்றி : தரிசனச்சுடர் 2020 ஏப்ரல்
No Comments