24 Jul ஏன் கடவுள பாக்க முடியல?
- கடவுள் அல்லது இறைவன் ஆவியாயிருக்கிறார். யோவான் 4:24
- ஆவியாயிருப்பதால், நாம் காண முடியாது
- இறைவனுக்கு சரீரம் அல்லது உடல் இல்லை
- முகத்தோற்றம் இல்லை
- உடல் சார்ந்த உருவம் இல்லை
- பாலினத்திற்கு அப்பாற்பட்டவர்
- பிதாவாகிய தேவனுக்கு ரூபமோ, வடிவமோ கிடையாது
- ஆவியாக இருப்பதால், காணப்படக்கூடாதவராக இருக்கிறார்
- ஒருவனும் இறைவனை, ஒருபோதும் கண்டதில்லை. 1யோவான் 4:12
- இயேசுவைக் காண்பது, தேவனைக் காண்பதாகும்
- முப்பரிமாணத்தில் – (கன சதுரம் – Cube)
- தெய்வீக பரிமாணத்தில் – இயேசு முழுமையான தேவன்
- மூன்றடுக்கு – முப்பரிமாணத்தில் 100% கனசதுரம்
- இருபரிமாணத்தில் – (சதுரம் – Square)
- மனுஷீக பரிமாணத்தில், இயேசு முழுமையான மனிதன்
- இருபரிமாணத்தில் 100% சதுரம்
- முப்பரிமாணத்தில், இருபரிமாணத்தைப் பார்க்கலாம்
- கனசதுரத்தில், சதுரத்தைப் பார்க்கலாம்
- இருபரிமாணத்தில், முப்பரிமாணத்தைக் காண முடியாது
- சதுரத்தில், கனசதுரத்தைப் பார்க்க முடியாது
- கடவுளின் முழுநிறைவும், மனித உடலில் கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.
கொலோசெயர் 1:15, 2:9 - இயேசுவைக் குறித்து, வேதாகமத்தில் வாசிக்கும்போது, நாம் தேவனுடைய அனைத்து தன்மைகளையும் பார்க்க முடியும்
இயேசு செய்தவை, பேசியவை மற்றும் அவருடைய முழுமையுமே, பிதாவைப் பற்றிய வெளிப்பாடுகளே. யோவன் 14:7,8
கடவுள் உண்மையில் யார்? என்பதை, இயேசு முழுமையாக வெளிப்படுத்தியிருக்கிறாரா என்பதை அறிய, வேதாகமத்தில் இயேசுவைக் குறித்து ஆய்வு செய்யுங்கள் .
அடிக்கோடிடாத வேதாகமத்தில், மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் வாசியுங்கள். வாசிக்கும்போது, இயேசுகிறிஸ்து என்னும் நபரின் மூலமாக, மனிதர்களுக்கு பிதா, தம்மை வெளிப்படுத்தினார்.
கிறிஸ்துவை விசுவாசித்தவர்கள், அவரிடத்தில் தேவனுடைய ரூபத்தைக் கண்டனர். விசுவாசியாதவர்களோ, அவரைக் கண்டபோது, சாதாரண மனிதர் என்றே நினைத்தனர்-
யோவான் 5:37,38.
இயேசு கிறிஸ்து ஒருவரே, பிதாவைக் கண்டவர். யோவான் 6:46
No Comments